user-image

Posted on: Sep 02, 2023

கையெழுத்தை மாற்றி தலையெழுத்தை மாற்றிய அற்புதங்கள்: யான் பணி புரிந்த திரு. P.C. Panth, IPS ADGP, யாக இருந்த போது அவருக்கு DGP ப்ரோமோஷன் வருவதில் நீண்ட கால தாமதம் ஆகிக் கொண்டிருந்தது. ஒரு நாள் எம்மை அழைத்து இதற்கு என்ன செய்யலாம் என்று கேட்டார். கையெழுத்தை மாற்றித் தருகிறேன் அதேபோல் போட்டு வாருங்கள். ப்ரோமோஷன் விரைவில் கிடைக்கும் என்று சொன்னேன். அவரும் அதேபோல் செய்தார். அவருக்கு 45 நாளிலேயே DGP ப்ரோமோஷன் வந்து மிகவும் மனம் மகிழ்ந்தார். எம்மைப் பற்றிஅவருக்கு பழக்கமான சக அதிகாரிகள் எல்லோரிடமும் இடமும் சொல்லி சென்றார். IGP திரு. குமரன். IPS., என்பவர் IGP ஆக ஒரே இடத்தில் இருந்து பணி புரிந்து கொண்டே இருந்தார். ஒருநாள் என் பெயரை சொல்லி அழைத்து எல்லோருக்கும் எல்லாம் செய்கிறீர்கள். எனக்கு ஏதாவது செய்யக்கூடாதா? என்று கேட்டார். யான் என்ன உங்களுக்கு செய்ய வேண்டும் என்று கேட்டேன். எனக்கு இங்கிருந்து மாறுதல் கிடைத்தால் ஒரு மாற்றம் கிடைக்கும் என்றார். அப்படியா. உங்கள் கையெழுத்தில் சிறு சிறு திருத்தம் செய்து தருகிறேன். அதை தொடர்ந்து போட்டு வாருங்கள். விரைவில் மாற்றம் வரும் என்றேன். அதேபோல் அவரும் செய்து வர EOW யிலிருந்து V& AC சென்றார். அங்கிருந்து சென்னை சிட்டி கமிஷனர் ஆக ப்ரோமோஷன் பெற்று சென்று ஓய்வு பெற்றார். SP திரு. கலிமுல்லா கான், IPS என்ற அதிகாரி ஒரு நாள் எம்மை அழைத்து சாமி இங்கேயே SP ஆகவே ப்ரோமோஷன் ஏதுமின்றி பல வருடங்களாக இருந்து கொண்டிருக்கிறேன். எனக்கு ஒரு மாற்றம் கிடைக்க ஒரு வழிவகை செய்து தரக் கூடாதா என்று கேட்டார். அதேபோல் அவருக்கும் கையெழுத்தை மாற்றிக் கொடுத்தேன். அவருக்கு ப்ரோமோஷன் கிடைப்பதற்காக இருந்த தடங்கல்கள் விலகி அங்கிருந்து மாற்றம் பெற்று ஓய்வு பெறும் போது சேலத்தில் IGP ஆக இருந்து ஓய்வு பெற்றார்.