user-image

Posted on: Aug 26, 2023

நான் தாராசுரத்தில் காய்கறி கடை வைத்து இருந்தேன். கோரானா காலத்தில் தொழில் முடங்கியது. இரண்டரை வருட கோரானா காலத்தில் திறந்திருந்த ஒரே கோயில் ஸ்ரீவேம்பூச்சித்தர் கட்டிய ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் கோயில் மட்டுமே. எல்லோரும் வந்து வணங்கி குறை கூறி செல்ல ஒரு புகலிடம் ஆக இருந்தது. தமிழ்நாடு முழுவதும் இருந்து ஜனங்கள் இங்கு வந்து பூஜைகளிலும் யாக வேள்வியிலு ம் வந்து கலந்து கொண்டு சுகம் அடைந்தார்கள். அப்போது சுவாமிகளிடம் எனக்கு ஏதாவது சிறிய கான்ட்ராக்ட் கிடைத்தால் அது கழிவறை பராமரிக்கிற பணியாக இருந்தால் கூட பரவாயில்லை என்று சொன்னேன். மூன்று மாதத்தில் கிடைக்கும் என்று சொன்னார்கள். சித்தர் ஸ்வாமிகள் சொன்னபடியே கும்பகோணம் இரயில்வே கழிவறை பராமரிக்கும் கான்ட்ரா க்ட் கிடைத்தது. இந்த பிறவியில் எங்கள் குறைகள் தீர இந்த ஆலயமும் ஸ்ரீவேம்பூச்சித்தர் ஸ்வாமிகளும் எங்களை போன்ற ஏழைகளுக்கு கிடைத்தது நாங்கள் ஏதோ ஒரு ஜென்மத்தில் செய்த புண்ணியம் என்றே கருதுகிறோம். எங்களைப் போல் இந்த மொத்த உலகமே இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விடக்கூடாது என்று மன்றாடி கேட்டுக் கொள்கிறேன்.