Posted on: Aug 21, 2023
#இறைவன்_நடத்திய_அதிசயம் #அற்புதம் இதுபோன்று எண்ணற்ற IPS அதிகாரிகளுக்கும் காவல் ஆளினர்களுக்கும் உதவியுள்ளேன். 2011ல் DGP Mr. K. P. ஜெயின் என்பவரிடம்(இவரிடம் கிட்டத்தட்ட 5 வருடத்திற்கு மேலாக முகாம் உதவியாளராக கூட இருந்து பணியாற்றினேன். மிக நல்ல மனிதர். 32 ஆண்டுகள் டெல்லியில் Intelligence Bureau வில் பணியாற்றியவர்). சென்னைக்கு வந்த அவருடைய வாழ்வில் இந்த 5-6 வருடங்கள் நிறைய அபூர்வ நிகழ்வுகள் நிகழ்ந்தன).அது போல் இது ஒரு நிகழ்வு. நான் முகாம் உதவியாளராக இருந்த போது ஒரு நாள் காலை அவர் மெரினா பீச்சில் நடைப்பயிற்சி செய்த போது அவரது கால் இலேசாக தடுக்கி விட நடைப்பயிற்சி முடிந்து வீட்டிற்கு சென்று தயாராகி அலுவலகம் வந்து வேலைகளை முடித்து மதியம் வீட்டிற்கு சென்று உணவு அருந்தி விட்டு சற்று ஓய்வு எடுக்க படுக்கை அறை சென்று ஓய்வு எடுத்து விட்டு படுக்கையை விட்டு எழ முயல்கிறார். முடியவில்லை. வீட்டில் உள்ள காவலர்கள் அவரை தூக்கி விட முயல்கிறார்கள். அவரால் எழ முடியவில்லை. உடனே எனது செல்பேசி ஒலிக்கிறது. மறுமுனையில் டிஜிபி. Gunassehegare n Are you in the office? You come here immediately to my house. I am not awaken from bed. என்று அழைக்கிறார். அலுவலகத்தில் தான் இருக்கிறேன். நானும் உடனே வருகிறேன் என்று சொல்லி அடையாறு ரோட்டில் குமாரராஜா சாலையில் உள்ள அவரது பங்களாவுக்கு செல்கிறேன். உள்ளே சென்று அவரது முதுகின் கீழே எனது கட்டை விரலை வைக்கிறேன். உடனே துள்ளி எழுந்து அமர்கிறார். என்ன செஞ்சீங்க? என்று என்னிடம் திரும்ப கேட்கிறார். நான் ஒன்றும் செய்யவில்லை. கை விரலை தான் வைத்தேன் என்று சொல்லி விட்டு வந்து விட்டேன். அதன் பின்னர் அவர் தயாராகி அலுவலகம் வந்தார். எனக்கு வர்மமும் தெரியாது. வர்மப் புள்ளியும் தெரியாது. ஆனால் அதிசயம் நிகழ்ந்தது. எல்லாம் இறை அருள் தானே. அங்கிருந்த எல்லோரும் பிரமித்து நின்றனர். அவரும் அவரது மனைவியாரும் கூட. DGP Mr. K.P.Jain, IPS, டெல்லியில் இருந்து இங்கு வரும் போது IGP, ஆக வந்து சிற்சில மாதங்களில் ADGP ஆகி அதன்பின் DGP, USRB, ஆகி DGP & CMD, TNPHC ஆக இருக்கும் போது அவருக்கு DGP, TN ஆக கிடைக்க சற்று கால தாமதம் ஆகிறது. ஒருநாள் என்னிடம் தாமதம் ஆகிக் கொண்டே இருக்கிறது. என்ன செய்வது? என்று கேட்கிறார். நான் என் மீது நம்பிக்கை இருந்தால் உங்களுக்காக ஒரு பூஜை செய்கிறேன் என்று சொல்கிறேன். வீட்டிற்கு வந்து செய்கிறீர்களா? என்று கேட்க நான் பொதுவாக வெளியில் போய் பூஜை செய்வது எல்லாம் கிடையாது. நீங்கள் விரும்பினால் என் வீட்டிற்கு வாருங்கள். நான் பூஜை செய்கிறேன் என்று சொல்ல நான் வருகிறேனே வீட்டில் அம்மாவையும் அழைத்து வரலாமா? என்று கேட்கிறார். தாராளமாக அழைத்து வாருங்கள் என்று சொல்லி ஒரு நாளை குறிப்பிட்டு சொல்கிறேன். சொன்ன நேரத்திற்கு ஒரு பெரிய ஸ்வீட் பாக்ஸ், ஒரு பட்டுபுடவையோடு வருகிறார். பூஜையில் கலந்து கொண்டு செல்கிறார். சில நாட்களில் தமிழக முதல்வரிடம் இருந்து இவர் சந்திப்பதற்கு அழைப்பு வருகிறது. சென்று சந்தித்து விட்டு வருகிறார். சில நாட்களில் அவர் DGP TN ஆக நியமிக்கப் ப டுகிறார். அவருக்கு எல்லையற்ற ஆனந்தம். நாம் ஒரு DGP நாம் எப்படி நம்முடைய முகாம் உதவியாளராக இருக்க கூடியவர் வீட்டிற்கு செல்வது என்று இல்லாது வந்து கலந்து சென்று நன்மையை பெற்றார். அதுபோல் அவருடைய வீட்டுக்கார அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை என்று சொன்னால் அம்மாவுக்கு இன்று கொஞ்சம் உடம்பு சரியில்லை. விபூதி உங்களிடம் இருந்து வாங்கி வர சொன்னார்கள் என்று என்னிடம் வாங்கி கொண்டு செல்வார். மறுநாள் வந்து அம்மாவுக்கு உடம்பு சரியாகி விட்டது என்றும் மறக்காமல் கூறுவார். அந்த அளவுக்கு இருவரும் என் மீது அளவுக்கு அதிகமான மரியாதையையும், நல்ல அபிமானத்தையும், நல்ல நம்பிக்கையையும் வைத்து இருந்தார்கள். கோயில் கட்டும் போது ₹.11,000/-த்தை அவராகவே கொடுத்தார். பொதுவாக ஜெயின் குடும்பத்தினர் மற்றவர்களுக்கு செய்வதற்கு மிகவும் யோசிப்பார்கள். செய்யவும் மாட்டார்கள். நம்பிக்கை என்றால் இவ்வளவு உறுதியாக தான் இருக்க வேண்டும். "நம்புங்கள் நடக்கும் என்பது சித்தர் வாக்கு. நடக்கட்டும் நம்புகிறோம் என்பது மனித கொள்கை." வேறு மதத்தினராக இருந்தாலும், ஒரு DGP ஆக இருந்தும் கூட "complex" எதுவும் கொள்ளாது என்னை முழுமையாக நம்பி செயல்பட்டார்கள். அனைத்திலும் நன்மை மேல் நன்மை பெற்றார்கள். அதிசயம் அற்புதம் DGP USRB Mr. B.P. Nailwal, IPS இவரிடம் 1.1.2000 யிலிருந்து 2005ல் அவர் ஓய்வு பெற்று செல்லும் வரை கிட்டத்தட்ட 6 வருடங்கள் அவருடன் முகாம் உதவியாளராக பணியாற்றினேன். மிக நல்ல நேர்மையான அதிகாரி. 2004ல் இவரிடம் பணி புரியும் போது எனக்கு ஜீப் டிரைவர் ஆக திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கமலக்கண்ணன் என்ற காவலர் இருந்தான். அவனுக்கு அம்மாவாசை, பௌர்ணமி வந்தால் ஒன்றும் செய்ய இயலாதவன் ஆகி படுத்த படுக்கை ஆகி விடுவான். ஒரு டம்ளர் தண்ணீரை கூட அவனால் தூக்க முடியாது. அந்த நாட்களில் வேலைக்கு வர மாட்டான். ஒருநாள் அந்தப் பையனை பற்றி விசாரிக்கும் போது வயது என்ன? கல்யாணம் ஆகி விட்டதா? உடலுக்கு என்ன வியாதி? என்று கேட்கும் போது மேற்கண்ட விவரங்களை சொன்னான். குல தெய்வம் பற்றி விசாரிக்கும் போது அங்கு வர மாட்டேன் என்று சத்தியம் செய்து விட்டு வந்து விட்டேன். குல தெய்வ கோயிலுக்கு செல்ல முயலுகிறேன் முடியவில்லை என்று சொன்னான். அதன் பிறகு இறைவனை வேண்டி கொஞ்சம் விபூதி மந்திரித்து தினசரி நெற்றியில் அணிவதுடன் கொஞ்சம் இரவில் வாயில் போட்டு தண்ணீர் குடித்து வா என்று கொடுத்து சில மந்திரங்கள் சொல்லி கொடுத்து இதை தொடர்ந்து சொல்லி வா. என்னை நினைத்துக் கொண்டு குல தெய்வக் கோயிலுக்கும் சென்று வா என்று சொன்னேன். நான் சொன்னதை எல்லாம் சொன்னபடி செய்து வந்தான். ஒரு சில மாதங்களிலேயே எல்லாம் சரியாகி பூரண குணம் ஆகி விட்டான். ஒரு நாள் திருவண்ணாமலை மாற்றலில் செல்லப் போகிறேன் என்றான். திருவண்ணாமலை சென்றான். நமக்கு வாழ்க்கையே அவ்வளவு தான் எல்லாம் முடிந்து விட்டது என்று சொன்னவன் இன்று திருமணம் ஆகி குழந்தை குட்டிகளுடன் சந்தோஷம் ஆக வாழ்ந்து வருகிறான். இது அவனுடன் சேர்ந்து பணியாற்றிய அனைத்து காவலர்களுக்கும் என்அலுவலக நண்பர்களுக்கும் இன்பம் கலந்த பேரதிசயம் ஆக இருந்தது.