user-image

Theagu, qatar

Posted on: Aug 15, 2023

நான் 15 வருடங்களுக்கு மேலாக கத்தாரில் வசித்து வருகிறேன். என் நெருங்கிய உறவினர் மூலமாக 2003ல் பெங்களூரில் வாங்கிய பாஸ்போர்ட்டை சென்னை முகவரிக்கு மாற்றுவதில் சிரமம் ஏற்பட்டதால் அப்போது சித்தர் ஸ்வாமி DGP&CMD, TNPHC Mr. B. P. Nailwal, IPS அவர்களிடம் PA ஆக இருந்ததால் DGP அவர்களிடம் ஒரு சர்ட்டிபிகேட் பெற்று தந்தால் மிக எளிதாக பாஸ்போர்ட் பெறலாம் என்று தான் சந்திக்க சென்றேன். ஸ்வாமியும் DGP இடம் சர்ட்டிபிகேட் பெற்று தந்தார்கள். அதை வைத்து அப்ளை செய்து பாஸ்போர்ட் பெற்றேன். அந்த நேரத்தில் எனக்கு சரியான வேலை இல்லாது என் மனைவி, இரு பிள்ளைகளை கவனிப்பது சிரமமாக இருந்தது. எங்கு வேலைக்கு சென்றாலும் 3 மாதம் 6 மாதம் நீடிப்பதே கஷ்டமாக இருந்தது. அப்போது ஸ்வாமிகள் சென்னையில் ராயப்பேட்டையில் 10/28 தான் வசித்து வந்த வீட்டில் அவர் செய்யும் பூஜைகள், ஹோமங்களில் கலந்து கொள்ள சொன்னார்கள். அதுபோல் தொடர்ந்து கலந்து வந்தேன். நிரந்தரமாக வேலை கிடைப்பதற்கு ஒரு மந்திரம் சொல்லி சொன்ன சொன்னார்கள். சொல்லி வந்தேன். ஒரு அஷ்டமி அன்று என் வீட்டிற்கே வந்து ஒரு ஹோமம் செய்தார்கள். இந்த பூஜை முடிந்த ஒரு மாதத்திற்குள் எனக்கு கத்தாரில் நான் ஆன்லைனில் கலந்து கொண்ட கம்பெனியில் இருந்து அப்பாய்ண்ட்மெண்ட் உத்தரவு வந்தது. சென்றேன். நிரந்தர உத்தியோகம் கிடைத்து மகளையும் மகனையும் நன்கு படிக்க வைத்தேன். சென்னையில் ஒரு வீடு வாங்கினேன். பெண்ணுக்கு திருமணம் மிக சிறப்பாக செய்து வைத்தேன். பல முறை உடல் வியாதிகளில் இருந்தும் ஏன் கொரோனா வியாதியில் இருந்தும் கூட காப்பாற்றப்பட்டோம். இன்று வரை நாங்கள் நன்றாக வாழ்ந்து வருவதற்கு சித்தர் ஸ்வாமியும், ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமானும் தான் காரணம் என்று100% க்கு சொல்லி பெருமைப்படுகிறேன்.