user-image

வாணிஸ்ரீ, திருவிசநல்லூர்

Posted on: Dec 09, 2025

என் பெயர் வாணிஸ்ரீ. நான் திருவிசநல்லூர் கடந்தெருவில் வசித்து வருகிறேன். என் அப்பா கட்டட தொழிலில் இருக்கிறார். நான்10 ஆம் வகுப்பு படிப்பதில் இருந்து என் அப்பா, அம்மா, தம்பி ஆகியரோடு இந்த ஆலயத்திற்கு வந்து செல்கிறோம். இங்கு வர ஆரம்பத்ததில் இருந்து வறுமை விலக தொடங்கியது. அப்பாவிற்கு தொடர்ந்து வேலை கிடைத்துக் கொண்டிருந்தது. நானும் 10 ஆவது, 11 ஆவது +2 படித்து B.E., Bio Medical Engg. படித்து கோயம்புத்தூரில் ஒரு நல்ல கம்பெனியில் வேலை கிடைத்து நாளை வேலைக்கு சேர இருப்பதால் இன்று இந்த ஆலயத்திற்கு வந்து ஸ்ரீ மஹா சொர்ணாகர்ஷன பைரவரை வேண்டியும் சித்தர் ஸ்வாமிகளிடம் ஆசீர்வாதம் பெறவும் என் பெற்றோரோடு வந்தேன். என்று இந்த ஆலயத்திற்கு வந்தோமோ அன்றில் இருந்து இன்று வரை தொடர்ந்து முன்னேற்றம் மேல் முன்னேற்றம் தான். இந்த கோயிலுக்கு உலக மக்கள் வந்து இந்த தெய்வத்தை வணங்கி வாழ்வில் எல்லா நற்பலன்களை யும் பெற்று சிறக்க வாழ வேண்டும் என்று நல்ல உள்ளத்துடன் தியானத்தில் காட்சி தந்த உலகில் வேறு எங்கும் இதுபோல் திருவுரு இல்லாத ஸ்ரீமஹா சொர்ணாகர் ஷன பைரவர் பெருமானுக்கு நிறைய செலவுகள் செய்து கோயிலை கட்டிய பைரவ உபாசகர் Dr. சொர்ணஸ்ரீ வேம்புச் சித்தர் ஸ்வாமிகளுக்கு தான் தங்கள் நன்றியை இந்த உலகமும், நானும், எங்கள் குடும்பமும் கூட நன்றிக் கடன் பட்டுள்ளது. அதேபோல் என் தம்பிக்கு R.I.M., படிக்க ஆர்டர் கிடைத்து இப்போது நன்றாக படித்து வருகிறான். இதுபோல் பல்லாயிரக் கணக்கான மக்கள் இங்கு வந்து ஸ்ரீமஹா சொர்ணா கர்ஷனபைரவரைவேண்டியும்யும் Dr. சொர்ணஸ்ரீ வேம்புச்சித்தர் அவர்களின் ஆசீர்வாதம் பெற்றும் சிறந்து விளங்கிக் கொண்டு இருக்கின்றனர். அதில் ஒரு குடும்பமாக எங்கள் ஒரு குடும்பமும் இணைந்து இருப்பதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியே. யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகமே என்று இப்பதிவை எல்லோரும் பார்க்க வேண்டும் என்று பதிவு செய்கிறேன். நன்றி.