Posted on: Oct 28, 2025
நான் மூன்று ஆண்டுகளுக்கு முன் இவ்வாலயம் வந்தேன். என் பெண்ணிற்கு திருமணம் ஆகி பல்லாண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை. ஒவ்வொரு மாதமும் இங்கு நடைபெறும் 4 ஹோமங்களில் தேய்பிறை அஷ்டமி ஹோமத்தில் சங்கல்பம் செய்து தொடர்ந்து பூஜை செய்து கொள்ளுங்கள் என்று சித்தர் சாமி சொன்னார்கள். அதுபோல் மாதாமாதம் தொடர்ந்து செய்து வந்தேன். இப்போது என் பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறாள். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இறைவனையும் சித்தரையும் உண்மையாக நம்பியவர்கள் ஏமாந்ததாக வரலாறு இல்லை என்பதற்கு என் வாழ்க்கையே எல்லோருக்கும் ஓர் எடுத்துக்காட்டு. எல்லோரும் என்னை போல் இங்கு வந்து வேண்டி பலன் பெற்று செல்லுங்கள்.