Posted on: Oct 07, 2025
நான் புதிதாக மார்ச் மாதம் ஜூஸ் கடை வைப்பதற்காக ஜூஸ் பாக்ஸ் நேரில் சென்று பார்த்து முன்பணமாக 10,000 ரூபாய் செலுத்தி ஆர்டர் செய்திருந்தேன் ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு டெலிவரி செய்யப்படும் என்று வாக்கு கூறினார் ஒரு வாரத்திற்குள் ஆக மீண்டும் கால் செய்து மீதி பணத்தை தருமாறு கூறினார் நாங்களும் ஐம்பதாயிரம் ரூபாய் ஒரு தடவையாகவும் 40 ஆயிரம் ரூபாய் இரண்டு நாளுக்கு பிறகு அனுப்பினோம் பணத்தை வாங்கிய பிறகு எங்களுடைய பொருளை அனுப்பவில்லை கேட்டதற்கு நாளை நாளை என்று நாள் கடத்தினார் பிறகு ஒரு வழியாக ரெடியாகிவிட்டது கேபிஎன் பார்சலில் புக் செய்து விட்டாச்சு என்று கூறினார் அதற்கான ரசீதையும் அனுப்பினார் நாங்கள் இரண்டு நாட்கள் கழித்து அதில் குறிப்பிட்ட நம்பருக்கு கால் செய்து கேட்டபோது திருநெல்வேலி வந்து விட்டது ஸ்ட்ரைக் நடக்கிறது சீக்கிரம் உங்களிடம் கிடைக்கும் என்று கூறினார்கள் ஆனால் அவர் பொருளை அனுப்பவும் இல்லை எல்லாம் ஏமாற்று வேலை. கடைசியாக எங்களுக்கு பாக்ஸ் வேண்டாம் பணத்தை திருப்பி தாருங்கள் என்று கேட்டபோது இதோ தருகிறேன் இதோ தருகிறேன் என்று ஏமாற்றி விட்டார் எங்களுக்கு கடை வாடகை ஒரு லட்ச ரூபாய் காண வட்டி எல்லாம் இழப்பு நாங்கள் கடையை கொடுக்கப் போகிறோம் எங்களுக்கு பணத்தை தாருங்கள் என்று கூறினோம் அதற்கு நான் பாதி வாடகை தருகிறேன் ஜூஸ் பாக்ஸ் இரண்டு நாளில் உங்களுக்கு அனுப்பி விடுகிறேன் என்று கூறினார் அனுப்பவே இல்லை ஐந்து மாதம் கெஞ்சி கூத்தாடி அவரிடம் அந்த பணத்தை பெறுவதற்கு மிகவும் பாடுபட்டேன் அக்டோபர் மாதம் எங்களுடைய பணத்தை இரண்டு முறையாக திருப்பித் தந்தார் எனவே பணம் கொடுத்து யாரும் ஏமாந்து விடாதீர்கள்.