user-image

ரூபிணி, பட்டுக்கோட்டை

Posted on: Jul 28, 2025

நான் பட்டுக்கோட்டையில் என் தாய், தங்கையுடன் வசித்து வருகிறேன். என்னுடைய தந்தை சமீபத்தில் இறந்து விட்டார். அடுத்து என்ன செய்வது? ஏது செய்வது என்று தவித்த வேளையில் இந்த ஆலயம் வந்து வேண்டி பலன் பெற்ற ஒருவர் சொன்னதின் பேரில் இங்கு என் தாயோடு வந்து வேண்டிக் கொண்டு சென்ற பின் பல வருடங்களாக விற்காது இருந்த டிராக்டர் விற்றது. பணம் வர வேண்டிய இடங்களில் இருந்து பணம் வந்தது. கடன்கள் ஓரளவு தீர்ந்தது நானும் B. Tech., டிகிரி முடிக்கும் நிலையில் உள்ளேன். இங்கு வந்து வேண்டி சென்ற பின் எங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இங்கு உள்ள சித்தர் ஸ்வாமிகளின் ஆசீர்வாதங்களுக்கும் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் பெருமானின் பெருங்கருணை க்கும் என்றும் எங்கள் குடும்பம் நன்றி கடன் பட்டுள்ளது.