Posted on: Jul 24, 2025
எனக்கு சொந்த ஊர் தேனி. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு என் பையன் ஒரு பெண்ணை விரும்பினான். பெண் வீட்டார் ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் விரக்தியுற்ற பையன் இனி திருமணமே வேண்டாம் என்று சொல்லி விட்டான். இப்போது கும்பகோணத்தில் வேலை கிடைத்து இங்கு வந்து விட்டோம். You tube ல் பார்த்து இந்த ஆலயத்திற்கு போன வாரம் தான் வந்தேன். விவரங்களை ஸ்வாமிகளிடம் சொன்னேன். ஸ்வாமி ஸ்ரீமஹா சொர்ணாகர் ஷன பைரவரை வேண்டி விபூதி கொடுத்து சில பரிகாரங்கள் சொன்னார்கள். செய்தேன். இப்போது கும்பகோணத்தில் ஒரு பெண் ஜாதகம் கிடைத்து என் பையனிடம் சொன்னேன். இவ்வளவு நாள் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லி வந்தவன் இப்போது சரி என்று ஒப்புக்கொண்டது ஸ்ரீ வேம்புச்சித்தர் மற்றும் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் பேராசியும் பேரருளும் பெருங்கருணையும் தான். மிகவும் விஷேசமான மிகவும் சக்தி வாய்ந்த கோயில் இன்னும் கோடிக் கணக்கான மக்களை சென்றடைந்து எல்லோரும் எல்லா வளமும் நலமும் பெற வேண்டும் என்பதே என் அவா.