Posted on: Jul 19, 2025
நாங்கள் எங்கள் பெண்ணிற்கு பலஆண்டுகளாக குழந்தை பாக்கியம் தாமதம் ஆகிக் கொண்டே இருந்ததால் இந்த கோயிலை பற்றியும் கோயிலை கட்டிய ஸ்ரீ வேம்புச்சித்தரை பற்றியும் கேள்விப்பட்டு இங்கு வந்து குழந்தை பாக்கியத்திற்காக வேண்டி சென்றோம். அப்போது சித்தர் ஸ்வாமிகள் குழந்தை பிறந்தால் ஸ்ரீமஹா சொர்ணாகர் ஷன பைரவருக்கு முழு அபிஷேகமும், குழந்தைக்கு எடைக்கு எடை ஸ்வீட், பழம், நெய், அரிசி வைக்கிறேன் என்று வேண்டிக்கொண்டு அர்ச்சனை செய்து 2 பசு நெய் தீபம் ஏற்றி ஆலயம் முழுவதையும் 27 முறை சுற்றி செல்லுங்கள் என்று சொன்னார்கள். அவ்வாறு செய்து விட்டு வந்தோம். அதன் பின் என் பெண் கர்ப்பம் தரித்து ஒரு குழந்தை இனிதே பிறந்தது. இந்த ஆலயத்தின் மகிமையும், இந்த ஆலயத்தை கட்டிய ஸ்ரீவேம்புச்சித்தர் புகழும் உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்று என் குல தெய்வத்தை மனதார வேண்டிக்கொள்கிறேன்.