Posted on: Jul 09, 2025
25 ஆண்டுகளுக்கு முன் ஸ்வாமிகள் சென்னையில் வசித்த போது என் ஸ்கூல் வேனில் அவர்களது பெண் குழந்தையையும் பள்ளிக்கு அழைத்து செல்வேன். அப்போது என் மனைவிக்கு 40 வயது ஒரு அரசு வேலைக்கு முயன்று கொண்டிருந்த போது அந்த வேலை என் மனைவிக்கு கிடைக்குமா? என்று கேட்டேன். நிச்சயம் கிடைக்கும் என்று சொல்லிவிட்டு ஒரு மந்திரம் சொல்லி இதை என் மனைவியை சொல்லிக்கொண்டே முயற்சி செய்ய சொன்னார்கள். அந்த வேலை கிடைத்து20 வருடம் வேலை செய்து போன மாதம் ஓய்வும் பெற்று விட்டார். ஸ்வாமி இறை பலம் நிறைய பெற்றவர். மிகவும் நல்ல சிறந்த ஆத்மா என்று தான் சொல்ல வேண்டும். கலியுகத் தில் இவரை போன்ற மிக சிறந்த எளிமையான மஹான்கள் இருக்கிறார்கள் என்பது நிறைய பேருக்கு தெரிவதும் இல்லை. இவர்களும் தம்மை வெளி உலகுக்கும் அடையாளம் காட்டிக் கொள்வதும் இல்லை.