Posted on: Jun 25, 2025
நான் ஒரு மருத்துவ கம்பெனியில் 15 ஆண்டுகள் ஆக எந்த பதவி உயர்வும் இன்றி மன வருத்தத்தில் இருந்தேன். இந்த ஆலயத்திற்கு எதேச்சையாக ஒரு முறை வந்தேன். ஸ்ரீமஹா சொர்ணா கருஷன பைரவரை தரிசித்து விட்டு ஸ்ரீவேம்புச்சித்தர் ஸ்வாமிகளிடம் என் குறையை கூறிய போது உன்னால் முடிகிற போது வந்து இங்கு நடைபெறும் தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி, பௌர்ணமி, அம்மாவாசை, அதுபோல் தினசரி இராகு கால வேளைகளில் வந்து வழிபட்டு செல். நானும் அதுபோல் செய்தேன். 6 மாதத்திற்குள் எனக்கு நல்ல பதவி உயர்வு கொடுத்து மதுரைக்கு மாற்றல் செய்து உத்தரவு கிடைத்தது. எல்லா புகழும் இந்த இறைவனுக்கும் சித்தர் ஸ்வாமிகளுக்கும் தான். இங்கு எப்படி தெய்வ சானித்தியம் நிறைந்து இருக்கிறதோ அதேபோல் சித்தர் பேரருளும் பரிபூரணமாக நிறைந்திருக்கிறது.