Posted on: Jun 23, 2025
நான் மிக ஏழ்மை நிலையில் இருப்பதால் என் பெண்ணுக்கு எப்படி திருமணம் செய்வது என்று எண்ணி இருந்த வேளையில் ஒருவர் மூலம் இந்த ஸ்ரீமஹா சொர்ணா கருஷன பைரவர் ஆலயம் பற்றி அறிந்து அங்கு சென்று இறைப் பரம்பொருளை தரிசனம் செய்த போது தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி, பௌர்ணமி, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, நாட்களில் உன்னால் எப்போது முடிகிறதோ அப்போது வந்து அர்ச்சனை செய்து வேண்டி செல். செலவில்லாமல் பெண்ணுக்கு திருமணம் நடக்கும் என்றார்கள். அவ்வாறு பெண்ணுடன் வந்து வேண்டி சென்றேன். பெண்ணுக்கு ஒன்றும் செய்ய வேண்டாம். எல்லா செலவுகளையும் நாங்களே பார்த்து கொள்கிறோம் என்று வசதியான வரன் வந்து திருமண மும் இனிதே முடிந்து என் மகள் ஒரு ஆண் குழந்தையும் பெற்று நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த தெய்வமும் அதை உலகிற்கு தியானத்தின் மூலம் கொண்டு வந்த 40 ஆண்டுகளாக ஆன்மீக த்தில் இருந்து உலகிற்கு தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு வழி காட்டி நன்மைகள் ஆற்றிய வரும் பைரவர் உபாசகர் Dr. சொர்ணஸ்ரீ வேம்பு சித்தர் அவர்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்து இறை சேவை செய்ய வேண்டும் என்று என் குல தெய்வத்தை வேண்டிக் கொள்கிறேன்.