Posted on: Jun 23, 2025
நான் நல்ல வேளையில் இருந்தும் அழகாக இருந்தாலும் திருமணம் தள்ளிக் கொண்டே இருந்தது என் குடும்பத்துடன் வந்து ஸ்ரீ வேம்புச்சித்தர் ஸ்வாமியை பார்க்க அவர்கள் ஸ்ரீ நாக சக்திகளுடன் கூடிய சொர்ணஸ்ரீ வேம்பு வாலை அம்மனுக்கு வெள்ளிக்கிழமை தோறும் ராஹு கால வேளைகளில் பால், பன்னீர், மஞ்சள் தூள் அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்து ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ வடுக பைரவர், ஸ்ரீமஹா சொர்ணா கருஷன பைரவர் ஆகிய தெய்வங்களுக்கு முறையே தேங்காய் எண்ணெய் தீபம், நல்லெண்ணெய் தீபம், நெய் தீபம் போட்டு வேண்டி கொள்ள சொன்னார்கள். 11 ஆவது வாரத்தில் அமெரிக்க மாப்பிள்ளை கிடைத்து ஒரு வருடத்தில் ஆண் குழந்தையும் பிறந்து சமீபத்தில் வேண்டி கொண்டபடி 1கிராம் தங்கத் தாலி ஸ்ரீமஹா வேம்பு வாலை அம்மனுக்கு சாற்றி நேர்த்தி கடனை முடித்து அமெரிக்காவில்தற்போது மிக சந்தோசமாக வாழ்ந்து வருகிறேன். நான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற்று இன்புற ட்டும். சித்தர் சாமிக்கு என் அன்பு மற்றும் நன்றி கலந்த வணக்கங்கள்.