Details
பிரபாலினி பிரபாகரன்
இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர்
• ஈழத்து மெல்லிசை குயில்
• தொழிலதிபர் – USA - California
-CEO and owner of kinder mission LLC
-CEO and owner of united studios - USA - production house
பெயர்: பிரபாலினி பிரபாகரன்
பிறந்த இடம்: இலங்கை, திருக்கோணமலை
தாய் மொழி: தமிழ்
தற்போதைய வசிப்பிடம்: கலிபோர்னியா, அமெரிக்கா
அம்மா: சிவமாலினி பரமேஷ் /சங்கீதபூஷனம் - அண்ணாமலை university
தாய் சிவமாலினியின் தந்தை சங்கீதவித்வான், சங்கீதபூஷனம் ஆ. நமச்சிவாயம் பிள்ளை, திருநெல்வேலி, யாழ்பாணம்.
அப்பா: ஈழத்து மெல்லிசை மன்னர் M.P.பரமேஷ்
இலங்கையின் முதல் தமிழ் இசைத்தட்டை இசையமைத்து, எழுதி, பாடி வெளியிட்டவர்.
தந்தை பரமேஷ் அவர்களின் தந்தையார் மா. பீதாம்பரம், சாவகச்சேரி-யாழ்பாணம்(கல்லூரி வித்தியதிகாரி தமிழ் அறிஞர், கவிஞர், பிள்ளை பாட்டு கவிஞர்.) இவர் சுவாமி விபுலானந்தரின் முதல் மாணவன்.
பிரபாலனி பிரபாகரன் இலங்கையின் இசை மற்றும் தமிழ் பாரம்பரிய குடும்பத்தை சேர்த்தவர்.
குடும்பம்: கணவர் பிரபாகரன், 2 குழந்தைகள் - கிரிஷ், கார்த்திக்
கல்வி மற்றும் ஆரம்பக் கலை பயிற்சி
• International trading in Germany
• MBA in USA
கலை வாழ்க்கை மற்றும் சாதனைகள்
• ஆரம்பம்: 4 வயதிலே மேடையேறிப் பாடிய பிரபாலினி, தனது தாயாரிடம் இசையில் பயிற்சி தொடங்கினார். தந்தையிடம் தமிழ் மற்றும் இசையமைப்பை கற்றுக்கொண்டார்.
• இலங்கையில் 1985 காலங்களில் தனது சிறு வயதில் 200க்கும் மேற்பட்ட மேடைகளில் இசை நிகழ்ச்சிகளை வழங்கினார்
• ஜெர்மனியில் 1993 வரை பல்வேறு ஐரோப்பிய நாட்டு இசைக்குழுக்களுடன் பல மேடைகள் பகிர்ந்தார்.
• பிரதான ஆல்பம்: "சங்கீத சாம்ராஜ்யம்" (1995), இதில் தந்தையார் எம்.பி. பரமேஷ் மற்றும் தாயார் மாலினி பரமேஷ் ஆதரவில் அமைக்கப்பட்டது. இந்த CD மூலம் இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் என்று அடையாளம் காணப்பட்டார்.
• அலங்கரிப்பு: "குயின் கோப்ரா" queen cobra (2015) சர்வதேச ஆல்பம், 5 மொழிகளில் சென்னையில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரை துறை சார்ந்தவர்கள் முன் நடை பெற்றது. மான்புமிகு திரு. திருச்சி சிவா, புலவர் புலமை பித்தன், திரு. ஶ்ரீகாத் தேவா, திரு. கங்கை அமரன், திரு. லக்ஸ்மன், திரு. T.S.S. மணி மற்றும் பலர் தலைமையில் வெளியிடப்பட்டது.
• Germanyல் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளராக வேலை செய்தவர் பிரபாலினி. புலம்பெயர்ந்த அகதிகளுக்கும் மொழி தெரியாமல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் வேண்டிய உதவிகள் செய்து அரசாங்கத்திடம் அவர்களுக்கான தேவைகளையும் உரிமைகளையும் பெற்று கொடுத்துள்ளார்.
இலங்கையிலும் இந்தியாவிலும் வசதியில்லாத குழந்தைகளை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
திருமணமாகி 14 வருடங்கள் குடும்பத்திற்காகவும் குழந்தைகளை வளர்ப்பதற்காகவும் கொஞ்சம் இசை வனத்தில் இருந்து ஒதுங்கியிருந்த இந்த ஈழத்து மெல்லிசைக் குயில் மீண்டும் தனது புது ஆற்றலுடன் களம் இறங்கி செய்த சாதனைகளும், பெற்ற விருதுகளும் பல.
முக்கிய சாதனைகள்
• விருதுகள்:
• இலங்கை மற்றும் ஐரோப்பாவில் கிடைத்த விருதுகள் “ஈழத்து மெல்லிசை குயில்” “கான குயில்” என 100 க்கனக்கான விருதுகள் பெற்றள்ளர். குறிப்பாக ஒரு ஈழத்துப்பெண்ணுக்கு முதல் முறையாக இந்தியாவில் இசைக்கு விருது கிடைத்த பெருமை இவருக்குத்தான் சேருமென கருதுகிறோம்.
• 2016 - இந்தியாவின் "ஸ்பெஷல் ஜூரி Edison விருது" (குயின் கோப்ரா ஆல்பத்திற்காக)
*Norway Tamil Film Festival (2024) - "ஆத்தங்கரே ஓரத்தில" பாடலுக்கு சிறந்த ஆல்பத்துக்கான விருது இவருக்கு உலகளாவிய வரவேற்பை தந்தன. இந்த பாடலை எழுதி, நடித்து, இசையமைத்து, பாடி, தயாரித்து உள்ளது பாராட்டுக்குரியது.
இலங்கை மற்றும் ஐரோப்பாவில் வெளியான “ நாளைய மாற்றம்” என்ற திரைப்படத்தில் “ போய் வாறோம் தாயே” என்ற நாட்டுப் பற்று பாடலை இசையமைத்துள்ளார், பாடகர் கலைமாமணி ஶ்ரீநிவாஸ் அவர்கள் பாடி, மாவீரர் தினம் அன்று வெளியிட பட்ட அந்த பாடல் இலங்கையில் மிக பிரபலமானது.
2024 இவரது தயாரிப்பில் வைசாலி சுப்ரமணியன் இயக்கத்தில் எடுக்கப்பட்ட குறும்படம் “புஷ்பாஞ்சலி” பல சர்வதேச விருதுகளை
வென்று உள்ளது. தமிழ்அகம் என்ற அமைப்பு சிறந்த தயாரிப்பாளர் விருது வழங்கி உள்ளது.
இந்த குறும்படம் பெற்ற விருதுகள்:
கனடாவில் நடந்த டொரண்டோ இன்டர் நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவலில் இந்த குறும்படம் சிறந்த சமூக விழிப்புணர்வு படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இன்று வரை சுமார் 21 விருதுகளை இந்த குறும் படம் பெற்றிருக்கிறது. அவற்றில் சில:
1. Toronto International Tamil Film Festival 2024(Best Director Award)
2. Tamizhagam International Film Festival 2024 (Best Producer Award)
3. Bollywood Hollywood Film Festival Las Vegas 2023(Best Film Award)
4. Sundarban International Film Festival 2024 (Best Film award)
5. Rameswaram International Film Festival 2024 ( Best Film Award)
6. International Short Film Festival 2024(Best Film Award)
7. Goa International Film Competition 2024 (Official Selection )
• நிகழ்ச்சிகள்:
• இலங்கை, இந்தியா, ஜெர்மனி, ஸ்விஸ், நெதர்லாந்த்ஸ், ஐக்கிய ராச்சியம், டென்மார்க், கனடா, அமெரிக்கா மற்றும் பல நாடுகளிலும் மேடையேரி 800க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் செய்தவர்.
• 1999ல் Germanyல் ரிதம்ஸ் (Rhythms) இசைக் குழுவைத் தொடங்கினார்.
• சிறந்த இசைக் கலைஞர்கள் உடன் இணைப்பு - உலகம் முழுவதும் பல பிரபல இசைக் கலைஞர்களுடன் மேடையை பகிர்ந்த பிரபாலினி
• ஐரோப்பா நாடுகளில் பல விளம்பர படங்களுக்கும், இசை ஆல்பங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
• தனது தந்தை 70பதுகளில் பாடி, இசையமைத்து இசைத் தட்டில் வெளியிட்ட பாடல்களை டிஜிட்டல் முறையில் 3 பாடல்களை ஆல்பம் பாடல்களாக தயாரித்துள்ளார்.
1. யாழ் பாடி யாழ்ப்பாணம்…
2. திருகோணமலை எங்கள் நாடு…
3. மீனிசை பாடி வரும்….
என்று இலங்கை நாட்டின் பெருமை பேசும் இந்த பாடல்களை இலங்கை அமைச்சர்கள் மற்றும் மூத்த இசை கலைஞர்கள் முன்னிலையில் வெளியிட்டு தன் தந்தையின் ஆசையை நிறைவேற்றினார்.
இதில் யாழ் பாடி யாழ்ப்பாணம் மற்றும் மீனிசை பாடிவரும் என்ற பாடல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
பாடல்: QUEEN COBRA
இசை, பாடியவர், எழுதியவர்: பிரபாலினி பிரபாகரன்
LINK
பாடல்: ஆத்தங்கர ஓரத்தில
இசை, பாடியவர், எழுதியவர், தயாரிப்பு: பிரபாலினி பிரபாகரன்
நடிப்பு: பிரபாலினி பிரபாகரன், சுஜநிதன்
LINK
பாடல்: யாழ் பாடி யாழ்ப்பாணம்...
இசை, எழுதியவர்: ஈழத்து மெல்லிசை மன்னர் M.P.Paramesh
பாடியவர்: M.P.Paramesh, Prabalini
LINK
பாடல்: திருகோணமலை எங்கள் நாடு
இசை, எழுதியவர்: ஈழத்து மெல்லிசை மன்னர் M.P.Paramesh
பாடியவர்: M.P.Paramesh
LINK
பாடல்: மீனிசை பாடி வரும்
இசை, எழுதியவர்: ஈழத்து மெல்லிசை மன்னர் M.P.Paramesh
பாடியவர்: M.P.Paramesh
LINK
பாடல்: போய் வாறோம் தாயே ...
இசை: பிரபாலினி பிரபாகரன்
பாடியவர்: கலைமாமணி ஶ்ரீநிவாஸ்
பாடல் எழுதியவர்: அஸ்மின்
படம்: நாளைய மாற்றம்
LINK
பாடல்: சென்னை எங்கள் அன்னை
இசை, எழுதியவர், பாடியவர்: பிரபாலினி
LINK
மெகா மகளிர் சாதனையாளர் 2025ம் ஆண்டின் 16 வது விருது விழா நிகழ்ச்சியில் திருமதி ஜெயந்தி தங்கபாலு, திரு. தங்கபாலு அவர்கள் திருக்கரங்களால் வழங்கப்பட்டது.
stream link:
LINK
https://youtu.be/wnhTf87MCI4?si=d0mfz8K-AnCCh-S4
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Featured Video
Address | Rams Platina, No.31-S2, Murali Krishna Nagar, Main Road, Valasaravakkam, Chennai, Valasaravakkam, Chennai Taluk, Chennai District, Tamil Nadu 600087, India |
---|---|
Phone | 7449055777, +14694874659 |
Website |
Send Email to business

