Writer Aasu Professionals
Details
A. Subramanian, who is known as writer Aasu in the world of literature, was born in 1961 as the eldest son of Ra Arumugam-Vellachiammal couple in Munnoor village, Tindivanam taluk, Villupuram district.
He completed his S.S.L.C course from Life School. At an early age he was attracted to singing, went to libraries and read novels and short stories - then came to Chennai for a living, listened to the speeches of literary personalities - read pamphlets - got interested in writing poems and short stories.
He started writing works.
So far he has published twenty books like poems, short stories, poetry, text illustration and short stories. Creation is the light that shines in the hand-lamp of a faith dependent on the ups and downs of the mind.
இலக்கிய உலகில் எழுத்தாளர் ஆசு என்று அறியப்படும் ஆ.சுப்பிரமணியன் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், முன்னூர் கிராமத்தில் ரா.ஆறுமுகம் - வெள்ளச்சியம்மாள் தம்பதியினருக்கு, 1961 - ஆண்டு மூத்த மகனாகப் பிறந்தார்.
உயிர்நிலைப் பள்ளியில் S. S. L.C படிப்பை முடித்தார். சிறு வயதிலேயே கூத்துப் பாடலில் ஈர்த்து, நூலகங்களில் சென்று நாவல் சிறுகதை கவிதைகள் வாசித்தும் - பிறகு பிழைப்புக்காக சென்னை வந்து, இலக்கிய ஆளுமைகளின் உரையைக் கேட்டும் -சிற்றிதழ்கள் வாசித்தும் -கவிதைகள், சிறுகதைகள் எழுதும் ஆர்வம் பெற்று படைப்புகள் எழுதத் தொடங்கினார்.
இதுவரை கவிதைகள், சிறுகதைகள், கவிச்சித்திரம், உரைச் சித்திரம், குறுங்கதைகள் என்று இருபது நூல்கள் வெளியிட்டிருக்கிறார். மனிதத்தின் ஏற்றத் தாழ்வுகளை - அறம் சார்ந்து ஒரு நம்பிக்கையின் கை விளக்கில் ஒளிரும் வெளிச்சமாக இருப்பதுதான் படைப்பு.
கவிதைகள்
1. ஆறாவது பூதம்
2. என்றொரு மெளனம்
3. ஈரவாடை
4. குரல்களைப் பொறுக்கிச் செல்கிறவன்
5. நேசித்தவனின் வாழ்வுரை
6. தீண்டும் காதலின் சொற்கள்
7. நிலம் பருகும் மழை
8. தோழமை என்றொரு பெயர்
9. ஆசு கவிதைகள்
சிறுகதைகள்
10. அம்மாக்கள் வாழ்ந்த தெரு
11. நாட் குறிப்பில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்
12. கடந்து போகிறவர்களின் திசைகள்
13. செல்லி
14. செல்லி மற்றும் பிற கதைகள்
உரைச் சித்திரம்
15. மயிலிறகு வாசிக்கும் புத்தகம் கவிச்சித்திரம்
16. திறந்திருக்கும் சன்னலுக்குள் ஓடிக்கொண்டிருக்கும்
நதி (102 - கவிஞர்களின் கவிதைகள்)
17. ஆகாயத்தை அளந்த பறவைகளின் தடங்கள் (107 - கவிஞர்களின் கவிதைகள்)
குறுங்கதைகள் :
18. நீர்த்தாரை
நாவல் :
19.சுவரொட்டி
20. பஞ்சவர்ணம்
எழுத்தாளர் ஆசு அவர்களின் பரிசு / விருது :
* ஈரோடு கவிஞர் தமிழன்பன் விருது
* இலக்கிய வீதி அன்னம் விருது
* செஞ்சி தமிழினியனின்
* விதை நெல் விருது
* கவிக்கோ துரை. வசந்தராசன் ஐயாவின் பண்ணைத் தமிழ்ச் சங்க விருது
* செல்லி மற்றும் பிற கதைகள் நூலுக்கு, மலேசியா மாநாட்டில் நடைபெற்ற 11-வது உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் ஒரு லட்சம் ரூபாய் பரிசு.
* ஒரு வாளி தண்ணீர் சிறுகதைக்கு, இலக்கிய வீதி இனியவன் ஐயாவின் நினைவுப் பரிசு.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.23, Anna Highway, Amman Nagar, Oragadam, Ambattur, Chennai, Ambattur, Chennai Taluk, Chennai District, Tamil Nadu 600053, India |
---|---|
Subramanianaasu@mail. Com | |
Phone | 9283351092 |
Website |