Details
Tenkasi Yagam is located in Tenkasi. We work hard to provide excellent customer service to all our clients.
We are traditionally doing Homam and Yagam. It is customary to perform a sacrifice to save the country from trouble. Similarly, homam is done to get rid of the problems of an individual or a family.
In our daily life there is an environment where success can be achieved only by overcoming many obstacles and trials. However, there are some obstacles that we can't predict, and Drishti may pursue us. So we suffer without knowing why we are regressing.
By doing homams we can get divine powers and succeed in everything.
தென்காசி யாகம் தென்காசியில் உள்ளது. எங்களின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்க நாங்கள் கடுமையாக உழைக்கிறோம்.
பாரம்பரியமாக ஹோமம், யாகம் செய்து வருகிறோம். நாட்டை சிக்கலில் இருந்து காப்பாற்ற யாகம் செய்வது வழக்கம். அதேபோல், ஒரு தனி நபர் அல்லது குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபட ஹோமம் செய்யப்படுகிறது.
நமது அன்றாட வாழ்வில் பல தடைகளையும் சோதனைகளையும் தாண்டி வெற்றியை அடைய முடியும் என்ற சூழல் உள்ளது. இருப்பினும், நம்மால் கணிக்க முடியாத சில தடைகள் உள்ளன, மேலும் திருஷ்டி நம்மைத் தொடரலாம். அதனால் ஏன் பின்வாங்குகிறோம் என்று தெரியாமல் தவிக்கிறோம்.
ஹோமம் செய்வதன் மூலம் தெய்வீக சக்திகளைப் பெற்று அனைத்திலும் வெற்றி பெறலாம்.
நாம் பாரம்பரியமாக ஹோமம், யாகம் செய்து வருகின்றோம். நாட்டிற்கே ஏற்படும் சிக்கலிலிருந்து காக்க யாகம் நடத்தப்படுவது வழக்கம். அதே போல் தனி நபருக்கு அல்லது ஒரு குடும்பத்திற்கு ஏற்படும் பிரச்னைகளிலிருந்து விடுபட செய்யப்படுவது தான் ஹோமம்.
நம் அன்றாட வாழ்வில் பல தடைகள், சோதனைகளை தாண்டி தான் வெற்றியைப் பெறக் கூடிய சூழல் இருக்கிறது. இருப்பினும் நம்மால் யூகிக்க முடியாத சில தடைகள், திருஷ்டி நம்மை தொடரக்கூடும். அதனால் எதனால் நாம் பின்னடைவு அடைகின்றோம் என தெரியாமல் தவித்து வருவோம்.
ஹோமங்கள் செய்வதால் நாம் தெய்வ சக்திகள் பெற்று அனைத்திலும் வெற்றி பெற முடியும்.
கணபதி ஹோமம் :
காரியங்கள் தடைப்பட்டு வந்தால், அப்போது நாம் கணபதி ஹோமம் செய்ய எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி கிடைக்கும்.
ஹோமம் செய்தால் அதற்கான பலனை கொடுத்தே தீருவார்கள் தேவர்கள். அதில் முதன்மையானது தான் கணபதி ஹோமம்.. தேவர்கள் முதல் மகாதேவனான ஈசன் வரை அவர் மகனே ஆனாலும் வழிபட்டுவிட்டுத்தான் காரியத்தை தொடங்குகின்றனர்.
ஆண்டுக்கு ஒருமுறை கணபதி ஹோமம் செய்வதால் குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற குடும்ப பிரச்சனைகள் வராமல் சந்தோஷம் நிறைந்ததாக இருக்கும். அத்துடன் வீட்டில் உள்ள தீய சக்திகள் என்று அழைக்கப்படும் எதிர்மறை சக்திகள் வெளியேறி மாறாக நேர்மறை சக்திகள் அதிகமாகும்.
எந்த ஹோமம் செய்கிறோமோ இல்லையோ... ஆனால் வருடந்தோறும் ஒருமுறையாவது கணபதி ஹோமம் செய்யவேண்டும் என வலியுறுத்துகிறார்கள் ஆச்சார்யர்கள்.
புது வீட்டில் பால் காய்ச்சுவது அதாவது புதுமனைப் புகுவிழா நடத்துவது மாதிரியான விஷயங்களில் மட்டும்தான் கணபதி ஹோமம் நடத்தவேண்டும் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் எப்படி சாம்பிராணி புகையிட்டு, தீப ஆராதனைகள் செய்கிறோம். வாரந்தோறும் வீட்டில் இருப்பவர்களை நடு ஹாலில் அமரச் செய்து, திருஷ்டி சுற்றிப் போடுகிறோம் அல்லவா. மாதந்தோறும் வீட்டுப் பூஜையறையில் உள்ள பித்தளைத் தட்டு, விளக்கு, ஊதுபத்தி ஸ்டாண்ட் முதலானவற்றை கழுவி சுத்தம் செய்கிறோம்தானே. இதேபோல், வீட்டில் உள்ள தெய்வங்களுக்கு சாந்நித்தியம் திகழவும் இல்லத்தில் உள்ள தீயசக்திகள் துரத்தியடிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் வருடத்துக்கு ஒருமுறையேனும் கணபதி ஹோமம் செய்யவேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம்.
வீட்டில், கணபதி ஹோமம் செய்தால், வீட்டில் உள்ளவர்களுக்கு ஆரோக்கியம் மேம்படும். நோய்த்தாக்கத்தில் இருந்து விடுபடுவார்கள். மருந்து மாத்திரை செலவுகள் குறையத் தொடங்கும். வேலையில் உயர்வு, பதவியில் உயர்வு, சம்பளத்தில் உயர்வு என்ற நிலை தடதடவென நடந்தேறும். அதேபோல் வியாபாரத்தில் விருத்தி ஏற்படும். உறவுகளால் ஏற்படக் கூடிய பூசல்கள் குறையும். பரஸ்பரம் குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும்.
மனதில் உள்ள குழப்பங்கள் அனைத்தையும் நிவர்த்தி செய்து தருவார் கணபதி பெருமான். கேது திசை நடப்பவர்களுக்கு பாதிப்பு குறையும். திருமணம் முதலான சுப விசேஷத் தடைகள் அனைத்தும் விலகும். மங்கல காரியங்கள் நடக்கத் தொடங்கும்.
கணபதி ஹோமத்தில், அக்னியில் இருந்து வெளியேறும் புகையானது இல்லத்தில் இருக்கிற தீயசக்திகளைத் துரத்தியடிக்கும். மனக் கிலேசத்தைப் போக்கும். புத்தியிலும் மனதிலும் புத்துணர்ச்சியை உண்டாக்கும். அக்கம்பக்கத்தாரின் திருஷ்டியில் இருந்து பாதுகாக்கப்படலாம். இல்லத்தில் சுபிட்சம் நிலவும். தனம், தானியச் சேர்க்கை நிகழும்.
சொந்த வீட்டில் தான் கணபதி ஹோமம் செய்யவேண்டும் என்பதோ புதுமனைப் புகுவிழாவின் போதுதான் செய்யவேண்டும் என்பதோ இல்லை. வாடகை வீட்டில் இருப்பவர்கள் கூட கணபதி ஹோமம் செய்யலாம். சொல்லப்போனால், வாடகை வீட்டில் கணபதி ஹோமம் செய்து, மனதாரப் பிரார்த்தனை செய்துகொண்டால், விரைவில் வீடு மனை வாங்கும் யோகமும் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
ஹோம குண்டத்தில் போடப்படும் 108 மூலிகை பொருட்கள் .
1. வெண்கடுகு 2. துளசி இலை 3. கரிசலாங்கண்ணி 4. சிறுகுறிஞ்சான் 5.சாரணை கொடி 6. லெமன் கிராஸ் 7.தர்ப்பை புல் 8.மஞ்சள் கரிசாலை 9.நாய் கடுகு 10. நாயுருவி விதை 11. கஸ்தூரி 12. சோரசோனை 13. இலந்தை வத்தல் 14. சோரணை வேர்15. வலம்புரி 16. இடம்புரி 17. வெட்டி வேர் 18. விலா மிச்சம் வேர் 19. நன்னாரி வேர் 20. வசம்பு 21. திப்பிலி 22. அஸ்வகந்தா 23. அதிமதுரம் 24. ஆலம்பட்டு 25. அரசம்பட்டு 26. கருவேலம்பட்டை 27. பூவரசம்பட்டை 28. நாவல்விதை 29. ரோஜா இதழ் 30. மகிழம்பூ 31. செம்பருத்தி
32. குண்ணிமுத்து 33. வெள்ளை குண்ணிமுத்து 34. தேக்கவிதை 35. துளசி விதை 36. சவுக்க விதை 37. கொழுஞ்சி
38. சித்திரத்தை 39. பேரரத்தை 40. ஜடா மஞ்சி 41. கொட்டை தேங்காய் 42. புங்கை பூ
43. புங்கை விதை 44. மராட்டி மொக்கு 45. மருதாணி விதை 46. சீமை அகத்தியிலை 47. கிராம்பு 48. ஏலக்காய் 49. கன்னுப்பீழை 50. கோரக்கிழங்கு 51. பூலாங்கிழங்கு
52. நாக்கொட்டாம்பழம் 53. மரிக்கொழுந்து 54. மருகு 55. மருதம்பட்டை 56. ஆடாதொடை 57. வல்லாரை 58. கிளாச்சிக்காய் 59. கடுக்காய் 60. தான்றிக்காய் 61. நெல்லிக்காய் 62. வெப்பாலை அரிசி 63. சம்பங்கி விதை 64. எருக்கலம் பூ 65. ஆகாசகருடன் கிழங்கு 66. தொட்டா சிணுங்கி 67. கொய்யா பிஞ்சு 68. சீதாப்பழம் பிஞ்சு 69. கடுக்காய் பூ, 70. இலுப்பை விதை 71. அரச விதை 72. ஆல விதை 73. 74. சரக்கொன்றை 75. மருதங்கோட்டை 76. வேம்பாலப் பட்டை 77. பிரண்டை 78. கீழாநெல்லி 79. மேலாநெல்லி 80. அருகம்புல் 81. வேப்பிலை 82. கொய்யா இலை 83. நிலப் பனங்கிழங்கு 84. ஜவ்வாது 85. கட்டுக்கொடி 86. கருடக்கொடி 87. கருடக்கொடி வேர் 88. தண்ணீர்விட்டான் கிழங்கு 89. மகிழம்பூ விதை 90. கண்ட திப்பிலி 91.நீலி அவரி 92. அவரிக்காய் 93. ஆவாரம் பூ 94. நெருஞ்சி முள் 95. யானை நெருஞ்சி 96. கருங்காலி 97. குங்குமப்பூ 98. கஸ்தூரி மஞ்சள் 99. முள் சீத்தாப்பூ 100. நித்திய கல்யாணி விதை 101. வன்னிக்குச்சி 102. ஆவார இலை 103. ஆவாரங்காய் 104. வில்வகாய் 105. பப்படம் புல் 106. பப்பாடகம்
108. சிறியாநங்கை.
ஹோம குண்டத்தில் போடப்படும் பொருட்களும் அதன் பலன்களும்.
நாம் நடத்தும் ஹோமங்களில் பலவித சமித்துக்களை அக்னியில் போட்டு ஆகுதி செய்கிறோம். அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதப் பலன் உண்டு. சமித்து என்பது ஹோமகுண்டத்தில் சேர்க்கப்படும் குச்சிகள்.ஒவ்வொரு சமித்து குச்சிக்கும் ஒவ்வொரு வேண்டுதல்களும் பலன்களும் உள்ளன.
வில்வம் : சிவனுக்கும்
மஹாலட்சுமிக்கும் பிடித்தமானது
துளசி சமித்து : நாராயணனுக்குப் பிடித்தது
அத்தி சமித்து : சுக்கிரனுக்குப் பிடித்தது
நாயுருவி சமித்து : புதனுக்குப் பிடித்தது
பலாமர சமித்து : சந்திரனுக்குப் பிடித்தது
அரசரமர சமித்து : குருவிற்குப் பிடித்தது
வன்னிமர சமித்து : சனீஸ்வரனுக்குப் பிடித்தது
அருகம் புல் : விநாயகருக்கும்,ராகுவுக்கும் பிடித்தது
மாமர சமித்து : சர்வமங்களங்களையும் சித்திக்கும்
பாலுள்ள மரத்தின் சமித்துக்கள் : வியாதி நாசினி
தாமரை புஷ்பம் : லஷ்மிக்கும் சரஸ்வதிக்கும் பிடித்தமானது
மாதுளை மரம் : அழகான் வடிவமும்,வசீகரமும் கிடைக்கும்.
ஹோம சமித்து குச்சிகளும் பலன்களும்:
அத்திக் குச்சி : மக்கட்பேறு.
நாயுருவி குச்சி : மகாலட்சுமி கடாட்சம்
எருக்கன் குச்சி : எதிரிகள் இல்லாத நிலை
அரசங் குச்சி : அரசாங்க நன்மை
கருங்காலிக் கட்டை: ஏவல் ,பில்லி ,சூனியம் அகலும் .
வன்னிக் குச்சி : கிரகக் கோளாறுகள் நீங்கிவிடும்.
புரசங் குச்சி : குழந்தைகளின் கல்வி வளர்ச்சி
வில்வக் குச்சி : செல்வம் சேரும்
அருகம்புல் : விஷபயம் நீங்கும்.
ஆலங் குச்சி :புகழைச் சேர்க்கும்.
நொச்சி : காரியத்தடை விலகும்.
வில்வம் : வில்வ சமித்தினைக் கொண்டு ஹோமம் செய்தால் ராஜ யோகம் கிட்டும்.
வில்வப்பழ ஹோமத்தால் சக்தி செல்வங்களையும் பெறலாம். சிவசக்தி சம்பந்தமான சண்டி ஹோமம் போன்ற யாகங்களில் வில்வம் சமித்தாகப் பயன்படுத்தினால் பலன்கள் நிறைய உண்டு.
துளசி : துளசி சமித்தினால் ஹோமம் செய்தால் நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி நடைபெறும். எண்ணிய காரியம் கைகூடும்.
சோமவல்லிக் கொடி : கொடிக்கள்ளி எனப்படும் இதன் ரசத்தைப் பிழிந்து ’சோமாம்ருதம்’ ம்ருத்யுஜய மந்திரத்தினால் ஹோமம் செய்தால் சகல நோய்களும் நீங்கி, தேகத்தில் அமிர்தம் உண்டாகி பிரம்மதேஜஸ் பெறலாம்.
கொடியை கணுக்கள் தோறும் ஒடித்து பாலில் தோய்த்து சூர்ய மந்திரம் கூறி அக்னியிடம் இட வேண்டும். இதனால் காச நோய் அகலும்.
பலாசு சமித்து : இது சந்திர கிரக சமித்தாகும். இதனால் சந்திரகிரக பிரீதியாகும். பலாசு புஷ்பத்தால் எல்லா இஷ்ட காரியங்களும், பலாசு ரஸத்தால் ஞான விருத்தியும், சிறந்த புத்தியும் பெறலாம். பலாசு குச்சிகளை அக்னி ஹோத்திரம் செ¢ய்து அதனால் ஸ்நாபானம் செய்யின் ப்ரம்ம ஞானம் அடைந்து பரப்பிரம்ம சொரூபம் அடையலாம்.
அரசு சமித்து : அரசு சமித்து குரு கிரகத்தின் சமித்தாகும். அரச மரத்தின் சமித்தால் தலைமைப் பதவி வரும். போரில் ஜெயம் அடைந்து அரச தன்மை கிடைக்கும்.
வெள்ளை எருக்கு : இது சூரிய கிரகத்தின் சமித்தாகும். இம்மூலிகை சர்வசக்தி பொருந்தியது. வசியம், மோகனம் ஆகிய அஷ்டாமித்துகளையும் அடையலாம். இச்சமித்து களால் ராஜ வசியம், ஸ்திரீ வசியம், மிருக வசியம், சர்ப்ப வசியம், லோக வசியம்,
சத்ரு வசியம், தேவ வசியம் ஆக சர்வ வசியங்களையும் அடையலாம். எடுத்த வேலை இனிதே முடியும்.
செம்மர சமித்து : இது அங்காரக கிரக சமித்தாகும். இதனால் ரண ரோகங்கள் நீங்கும். தைரியம் பெருகும்
நாயுருவி சமித்து : இது புது கிரக சமித்தாகும். இதனால் லட்சுமி சுடா¢ட்சம் ஏற்படும். சுதர்சன ஹோமத்திற்கு இதுவே சிறந்தது.
அத்தி சமித்து : இது சுக்கிர கிரகத்தின் சமித்தாகும். பித்ரு ப்ரீதி பெற்று விரும்பிய பொருள் கைகூடும். பில்லி, சூனியம், பிசாசு பயங்களிலிருந்து விடுவித்து சத்ருக்களை வெல்லும். பைத்தியமும் மேக ரோகங்களும் அகலும். வாக்கு சித்தியும் ஏற்படும். பசு, யானை, குதிரை நோய் நீங்கும்.
வன்னி சமித்து : வன்னி சமித்து சனிக் கிரகத்தின் சமித்தாகும். இதில் அக்னிப் பகவான் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. வன்னி சமித்து யாக பஸ்மாவைத் தரித்தால் அது நெற்றியில் எழுதியிருக்கும் யம சம்பந்தமான எழுத்தைத் தொலைத்து விடும். இந்த சமித்து பஸ்பம் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் மூவுலகினையும் மூன்று அக்னிகளையும் முக்குணங்களையும் குறிப்பதாக இருக்கிறது. சகல தெய்வ, தேவாதி களும் இச்சமித்தால் மகிழ்ச்சி அடைகிறார்கள். பூகம்பங்களால் உண்டாகிற பயங்கள் நீங்கும். சகல தோஷங் களும் நிவர்த்தியாகும்.
தர்ப்பை சமித்து : கேது பகவானுக்கு தர்ப்பை சமித்து மிகவும் பிடித்தமானதாகும். இது ஞான விருத்தியைத் தரும்.
அருகம்புல் : இது ராகு பகவானுக்குப் பிடித்தமானது. இதனால் பூர்வ ஜென்ம வினைகளும் சர்வ இடையூறுகளும் நீங்கி காரியம் சித்தியடையும். கீர்த்தியும், புகழும் பெறலாம். அறிவும், அழகும், வசீகரமும் உண்டாகும். கணபதி ஹோமத்தில் இதைப் பயன்படுத்துவார்கள்.
கரும்பு : கரும்புத் துண்டுகளையாவது அல்லது கருப்பஞ்சாறையாவது கொண்டு ஹோமம் செய்தால் வரனுக்கு விரும்பிய கன்னிகையும், கன்னிகைக்கு விரும்பிய வரனும் கிடைப்பர். இதையும் கணபதி ஹோமத்தில் பயன்படுத்துவார்கள்.
ஆலசமித்து : இது ம்ருத்யஞ்சய வேள்வியின் முக்கிய சமித்து. யமனுக்குப் பிடித்தமானது. இதனால் நோய்கள் நீங்கும். ஆயுள் நீடிக்கும்.
எள் : ஹோமத்தில் எள் போட்டு யாகம் செய்ய பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும். தீராத கடன் தொல்லை தீரும்.
புங்க மரம் : இதன் சமித்து வெற்றியைத் தரும்.
இலந்தை : இந்த சமித்தினால் ஹோமம் செய்ய குடும்பம் இனிது வாழ வழி உண்டாகும்.
தேவதாரு : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல தெய்வங்களும் வேண்டிய வரங்களைக் கொடுப்பார்கள்.
வல்லாரைக் கொடி : இதை ஆகுதி செய்தால் கல்வி சிறப்பாக வரும். ஞாபக சக்தி அதிகரிக்கும் சரஸ்வதி கடாட்சமும் ஏற்படுத்தும்.
சந்தன மரம் : இதன் சமித்தால் ஹேமம் செய்தால் மூதேவி முதலிய சகல பீடைகளையும் விலக்கி லட்சுமி கடாட்சம் ஏற்படும். சகல சம்பத்துடன் வாழ்வார்கள்.
வேங்கை மரம் : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் பில்லி சூன்யம், ஏவல், பிசாசு, பயம் ஓழியும்.
மகிழம்பூ : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல துக்கங்களும் நிவர்த்தியடைந்து சிக்கல்கள் அனைத்தும் தீரும். மனம் அமைதி பெறும்.
பூவரசு : இந்த சமித்து பூலோக அரச மரம் என்று வழங்கப்படுகிறது. அரசு சமித்து இல்லாத குறையை இந்த சமித் அரசு சமித்தினால் செய்யப்படும் ஹோமம் தரும் பலன் இதற்கும் உண்டு.
நவதானியங்கள் : அந்தந்த கிரகங்களுக்குரிய தானியத்தால் நவக்கிரக ஹோமம் செய்தால் கிரக தோஷங்கள் விலகும். சுபிட்சம் நிலவும்.
மஞ்சள் : முழு மஞ்சள் ஸ்ரீ வித்யா ஹோமத்துக்குச் சிறந்தது. சகல வியாதிகளை நீக்கும். அதோடு கல்வியும், செல்வமும் தரும்.
கணபதி ஹோமம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் தேவைப்படும்.
- மஞ்சள் தூள்
- குங்குமம் சிறிய பாக்கெட்
- வெற்றிலை 10, வெற்றிலை
- அகர்பத்தி 1 பாக்கெட்
- கற்பூரவல்லி சிறிய பாக்கெட்
- சந்தன தூள்,
- அரிசி ½ பவுண்ட்.
- ரவிக்கை துண்டு 1 (சிவப்பு அல்லது மஞ்சள்)
- பூக்கள் 2 கொத்துகள்
- தேங்காய் 3
- வாழைப்பழம் ½ டஜன்
- பல்வேறு வகையான பழங்கள்
- நாணயங்கள்
- நெய் சிறிய பாட்டில்
- காய்ந்த தேங்காய் (முழு) 2 அல்லது பாதி – 4 துண்டுகள்
- ஏலக்காய்
- கிராம்பு
- குங்குமப்பூ
- எண்ணெய்
- தீப்பெட்டி
- அலுமினியம் (தட்டு) உணவுக் கொள்கலன்கள் 1 சதுர அடி. 2 எண்கள்,
- அலுமினியம் ஃபாயில் ரோல்
- கணபதி சிலை அல்லது புகைப்படம்
- அரிசி போஹா (அடித்த அரிசி)
- தேன்
- பேரிச்சம்பழம்
- பாதாம்
- திராட்சை
- முந்திரி
- சர்க்கரை மிட்டாய்
- தட்டுகள் அல்லது தட்டு 4,
- புதிய கரண்டி 2
- மணிகலசம் 1,
- நைவேத்யம் (பிரசாதம்) ஜாகரி பொங்கல்
- மோதக்
- குடுமுலு
- உண்டரல் – தெலுங்கு
- கர்ஜிகை – அல்லது சுண்டல்.
சண்டி ஹோமம்:
பயம் மற்றும் நம் தரித்திரத்தின் காரணமாக பல செயல்கள் தடைப்படும். அதிலிருந்து விடுபட்டு தைரியம் ஏற்பட சண்டி ஹோமம் செய்யலாம்.
நவகிறஹ ஹோமம்:
நம் ஜாதகத்தில் பல கிரகங்களின் தோஷம் இருக்க கூடும். அந்த கிரக தோஷங்களை நீக்கி, வாழ்வில் மகிழ்ச்சியும், வளமும் அடைய நவகிரக ஹோமம் செய்வது நல்லது.
சுதர்ஸன ஹோமம் :
நம் பகைவர்களை அழிக்கவும், நமக்கு வேண்டாதவர்கள் வைத்த பில்லி, சூனியம், ஏவல் உள்ளிட்ட தீய சக்திகளை அழிக்க சுதர்ஸன ஹோமக் செய்ய, சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
ருத்ர ஹோமம் :
ருத்திர ஹோமம் செய்ய கோபம் குறைந்து ஆயுள் விருத்தி ஏற்படும்.
மிருத்யுஞ்ச ஹோமம் :
மாந்தி கிரகம் சனி பகவானின் மைந்தன் என கூறப்படுகிறது. அதனால் அது அமைந்திருக்கும் இடமும் பாதகத்தை தரக்கூடும். இந்த தோஷத்தை நீக்கவும், பிரேத சாபத்தை நீக்கவும் மிருத்யுஞ்ச ஹோமம் செய்வது நல்லது.
புத்திர கமோஷ்டி ஹோமம் :
புத்திர பாக்கியத்தை பெற நாம் புத்திர கமோஷ்டி ஹோமம் செய்வது நல்லது.
சுயம்வரகலா பார்வதி ஹோமம்:
நீண்ட காலமாக பெண்களுக்கு ஏற்படக் கூடிய திருமண தடை நீங்க சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்ய விரைவில் திருமணம் நடைபெறும்.
ஸ்ரீகாந்தர்வ ராஜ ஹோமம் :
நீண்ட காலமாக ஆண்களுக்கு இருக்கும் திருமண தடையை நீக்கி விரைவில் திருமணம் நடைபெற ஸ்ரீகாந்தர்வ ராஜ ஹோமம் செய்வது நல்லது.
லக்ஷ்மி குபேர ஹோமம் :
வறுமை நீங்கி செல்வ வளம் அதிகரிக்க, பொருளாதாரம் உயர செய்யப்பட வேண்டியது லக்ஷ்மி குபேர ஹோமம்.
தில ஹோமம் :
சனி பகவானால் ஏற்பட்ட தோஷம், இறந்தவர்களின் சாபத்தால் ஏற்பட்ட பாதிப்பை போக்க தில ஹோமம் செய்வது அவசியம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.57, B1-Velmurugan Complex, Madurai Main Road, Krishnapuram, Kadayanallur, Kadayanallur Taluk, Tenkasi District, Tamil Nadu 627759, India |
---|---|
Phone | 9080401396 |
Website |