Details
1.எமது நோக்கம்:
▷ இயக்கத்தில் இணைக்க !
▷ வறுமையை ஒழிக்க !
▷ வாக்கின் மதிப்பை அறியவைக்க !
▷ நமக்கான ஆளுமையை நாமே அமைத்திட !
▷ நமது அனைத்து உரிமைகளை பெற்றிட !
▷ இனி ஊழல், இலஞ்சத்தை அரவே ஒழித்திட !
▷ இனி நம்முல் வறுமையே இல்லாமல் செய்திட !
▷ சமூக இன்னல்களில் இருந்து நம்மை காத்திட !
▷ நமக்காக நாமே நம் வாழ்க்கை தேவைகளை ஏற்படுத்திட !
▷ நிரந்தர வாழ்வாதாரத்தை உயர்த்திட !
உருவாக்கப்பட்டதோ இயக்கம்.
R.BHARATH KUMAR. FOUNDER/MANAGING TRUSTEE
A.ARUL SAMARASAM
TRUSTEE
K.RAJALINGAM
TRUSTEE
இயக்கத்தில் இணையும் நமக்கு நாம் செலுத்திக் கொள்ளும் வைப்பு தொகை, மாத சந்தா, நன்கொடைகள் மூலம் நமக்காக நாமே வழங்கி கொள்ளும் நமது வாழ்வாதார உதவிகள் :-
▷ கல்வி உதவிகள்
▷ திருமண உதவிகள்
▷ மகப்பேறு உதவிகள்
▷ மருத்துவ உதவிகள்
▷ சிறு தொழில் உதவிகள்
▷ உறுப்பினரின் பிள்ளைகள் எவ்வித புதிய கண்டுபிடிப்பு ஊக்குவிப்பு நிதி உதவிகள்.
▷ இயற்கை சீற்றத்தால் ஏற்படும் இழப்பு நிதியுதவிகள்.
▷ இயற்கை / விபத்து மரண உதவிகள்.
▷ விபத்து ஊனம் உதவிகள்
▷ இறுதி சடங்கு உதவி (உடனடியாக)
▷ இயக்கத்தின் மிக முக்கிய உதவியான இறந்த உறுப்பினர் குடும்பத்திற்கு உதவும் வகையில் ( இறப்பு இறுதி வாழ்வாதார நிதி இயக்க உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் வழங்கி கொள்ளுதல்.)
குறிப்பு:- மேற்கண்ட உதவிகள் அனைத்தும் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு இலவசமாக வழங்கி கொண்டும். மேலும், இந்த உதவிகள் போதுமானதாக இல்லாத சமயத்தில் நமது இயக்கத்தில் முறைப்படி விண்ணப்பித்து நாம் செலுத்திக் கொள்ளும் நிதியிலேயே பெற்றுக் கொண்டு திரும்ப செலுத்தி கொள்ளும் வசதிகள் செய்து கொடுத்தல்.
2.இயக்கத்தின் இயக்குனர் செய்தி:
இந்திய குடிமகனாகிய நான் தமிழ் திரு தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டத்தில் பிறந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசித்து வந்த தெய்வ திரு.வி.ராமசந்திரன் காலாவதி அம்மையார் ஆகியோரின் புதல்வனாக இரா.பாரத் குமார் ஆகிய நான் கடந்த 25.12.1976 ம் நாள் இந்த பூவுலகில் தோன்றிய என் சிந்தனையில் தோன்றியது!
இந்திய தேசம் என்பது ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்து மீண்டு 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் நாள் இரவு 12 மணி முதல் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்ட இந்த நாளையே நாம் அனைவரும் "சுதந்திர தினமாக "கொண்டாடுகிறோம். இதன் தொடர்ச்சியாக சுதந்திர இந்தியாவின் அரசிலமைப்பு சட்டத்தை உருவாக்க டாக்டர் அம்பேத்கர் தலைமையில் ஏழு பேர் கொண்ட வரைவுக்குழு தொடங்கப்பட்டது. இந்த பணிகள் 1947ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29 ம் நாள் தொடங்கியது. இந்த சாஸன வரைவில் ஈடுபட்ட உருவாக்கக் குழு 1948 ம் ஆண்டு பிப்ரவரியில் 315 பிரிவுகள் 8 அட்டவணைகளுடன் சாஸனத்துக்கு இறுதி வடிவம் கொடுத்தபோது 395 பிரிவுகள் 8 அட்டவணைகள் கொண்டதாகி விட்டது. இதன் பிறகு சட்டத்தில் அவ்வப்போது செய்யப்பட்ட திருத்தங்கள் பல என்பதையும் "இந்திய அரசமைப்பு" நமக்கு நாமே 1949ம் ஆண்டு நவம்பர் இருபத்தாறாம் நாளாகிய அன்று வழங்கப்பட்டும். 1950 ம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ம் நாள் நடைமுறைக்கு வந்தது. இந்த தினத்தையே "இந்திய குடியரசு தினமாக" கொண்டாடுகிறோம், என்பதை அறிந்து கொண்டோன்.
இதன் தொடர்ச்சியாக இந்திய குடிமக்களுக்காக அரசியல் சாஸனம் நம் தேசத்தின் குடிமக்களின் "வாழ்வாதாரம்" மாக இயற்றியும் இதன் மூலம் வழங்கிய அடிப்படை உரிமைகளான குடியுரிமை, சமத்துவத்திற்கான உரிமை, சுதந்திரமாய் செயல் படுத்துவதற்கான உரிமை, சுரண்டலுக்கு கெதிரான உரிமை, வழிபாட்டுச் சுதந்திரம், பண்பாடு மற்றும் கல்வி சார்ந்த உரிமைகள், சொத்துரிமை, அடிப்படை கடமைகள். இவைகள் தவிர அனைத்து இனப்பிரிவு குடிமக்களுக்கும் அரசியல் சாஸனத்தின் மூலம் சட்டங்களும் திட்டங்களும் ஒரே நிலையில் வழங்கப்பட்ட போதிலும் நமது இந்தியதேசம் சுதந்திரம் பெற்று 76 ஆண்டும் குடிமக்களுக்காக இயற்றிய அரசியல் சாஸனம் இயற்றி 74ங்கு ஆண்டுகள் ஆகியும். கல்வி அறிவு இல்லாமல் இன்றும் எவ்வித நலன்களை பெற முடியாமல் பல கோடிக்கணக்கான ஏழை எளிய இந்திய குடிமக்கள் எவ்விதமான அடிப்படை வளர்ச்சியும் இன்றி தற்போதும் வறுமையின் பிடியிலும், அழிவின் விளிம்பிலும் வாழ்வதையும் உலக அளவில் தீவிர வறுமை நிலையில் உள்ளவர்களில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில் 73 கோடி பேர் வசிக்கின்றனர் என்றும். மேலும் "வறுமை என்பது உணவின்மை மட்டும் வறுமை அல்ல, கல்வியின்மை, உடை, உறைவிடமின்மை, வேலையின்மை, சுகாதாரமின்மை, சமூக ஏற்றத்தாழ்வு, உரிய வருமானமின்மை, போதிய சத்துணவுமின்மை கைவிடப்பட்ட ஆதரவற்ற நிலை" என வறுமைக்கு பல பரிமாணங்கள் உள்ளன. என்றும் "கொடியது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை" என்பதினை அறிந்தேன். இவர்களின் நிலையை மாற்ற எவர் ஒருவருக்கும். நேரம் இல்லை எவ்விதமான அக்கரையும் இல்லை என்பதை உணர்தேன். இப்படி வாழ்விளந்த இந்திய குடி மக்களை இனம் கண்டு ஒன்று இனைத்தும் நமக்காக நாமே நம்முடைய ஒவ்வொருவரின் வாழ்வாதார தேவைகளை நமக்குல்லேயே எற்படுத்தியும் வழங்கியும் இதன் மூலம் நமது ஒவ்வொருவரின் வாழ்வை வளம் பெற செய்யவும். இந்திய அரசியல் சாஸனம் குடிமக்களுக்கு வழங்கிய அனைத்து உரிமைகளை நலன்களை அறிய செய்தும் பெற்றுத்தந்தும். இது போன்று செய்வதன் மூலம் இனி வருங்காலகளில் நமது இந்திய தேசத்தில் ஏழை எளிய குடிமக்களே இல்லாமல் செய்தும், வறுமையே வென்றிட வேண்டும் என்பதற்காக என் சிந்தனையில் உதித்ததே இயக்கம்.
இயக்கம் உருவாக்குவதன் நோக்கம்:
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே தவிர வில்வதற்க்கு அல்ல! ஏழை எளிய உங்களுக்காக இந்த இயக்கம்! உங்களை தேடி உங்களின் வறுமையை முழுமையாக ஒழித்தும், இனி எவரிடமும் எதற்காகவும் எவ்வித கடன்களும் எப்போதும் பெறாமல் நம்மில் ஒவ்வொவொருவரின் வாழ்க்கை தேவைகளான கல்வி, வேலைவாய்ப்பு கிடைத்திட, இருப்பிடம் அமைத்திட, வியாதி, வயோதிகம், சுய வேலையின்மை, இறப்பு மற்றும் இயற்க்கை சீற்றங்களினால் ஏற்படும் இழப்புகளுக்கு உதவியளித்திட, இயற்கை வளத்தை காத்திட, நம்மில் ஒவ்வொருவரின் இறுதிக்கால குடும்ப வாழ்வாதார பங்களிப்பு நல நீதியை நமக்காக நாமே வழங்கிட, சமூக இன்னல்களில் இருந்து பாதுகாத்திட நிரந்தர வாழ்வாதாரத்தை உயர்த்திட, இவைகள் அனைத்தையும் இயக்கத்தில் இணையும், நமக்குள் சாதி, மத, இனம் மற்றும் மொழி போன்ற வேறுபாடுகள் இன்றியும் எவ்வித பிரதிபலனும் பாராமலும் வாழவும். "நாம் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை "என்பதை மனதில் பதிய வைத்தும். ஒன்று இணைத்தும் நம் வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவோம். எப்போதும் "தனிமரம் தோப்பாகாது " "ஒரு கை ஓசை எழுப்பாது" என்பதை அறிய வைத்து இயக்கத்தில் இணைத்து இயக்க கொள்கை, கோட்பாடுகளை மனதில் பதிய வைத்து குடிமக்கள் கண்ட வாழ்க்கை கனவுகளை நினைவாக்கவே இயக்கம் ! இந்திய குடிமக்கள் சுதந்திரமாக வாழ அன்று. "இந்திய சுதந்திர இயக்கம்" இந்திய குடிமக்களின் வறுமையை ஒழித்தும் அனைத்து உரிமைகளையும் பெற்று, வாழ இன்று "நமக்காக நாம் இயக்கம்" இனிதே துவக்கம்.
இயக்கத்தின் இலக்கு:
இந்தியா முழுவதும் செயல்படுத்த உருவாக்கப்பட்ட நமது "நமக்காக நாம் இயக்கம்" முதலில் தமிழ்நாட்டில் உள்ள 2023 ம் ஆண்டு அரசு அறிக்கை படி 2 கோடியே 23 லட்சத்து 96 ஆயிரத்து 836 எண்ணிக்கை கொண்ட "ஐந்து வகை குடும்ப அட்டைகளான (PHH , PHH -AAY , NPHH (R), NPHH (S), NPHH (NC))" உள்ளது. "வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் என்பது அரிசி , தானியம் , பருப்பு வகைகள் , பால் , சர்க்கரை , எண்ணெய், போன்ற உணவுப் பொருட்களை வாங்குவதற்கு தேவையான வருமானம் இல்லாதவர்கள் ஆகும். இது போல் உள்ள PHH , PHH -AAY , PHH - OAP , PHH -ANP ,மற்றும் NPHH (R)" போன்ற 2 கோடியே 18 லட்சத்து 51 ஆயிரத்து 810 எண்ணிக்கை கொண்ட குடும்ப அட்டை தலைவர்களில் தகுதியானவர்களை இனம் கண்டு நமது இயக்கத்தில் இணைத்து இவர்களின் ஒவ்வொருவரின் வாழ்வில் வளம் பெற செய்தும், செயல் படுத்தி காட்டுவதே இயக்கத்தின் இயக்குனரான என் இலக்கு ஆகும்.
அன்றும் இன்னும் என்றும் ஏழைகளின் சேவைகள்
இரா. பாரத் குமார்
நிறுவனர்/தேசிய தலைவர்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Konampatti, Thippampatti, Karimangalam, Karimangalam Taluk, Dharmapuri District, Tamil Nadu 635202, India |
---|---|
[email protected], [email protected] | |
Phone | 9443458464, 04346223464 |
Website |