K.P. Shahul Hameed Legal Consultant Consultancy
Details
திரு K.P. Shahul Hameed அவர்களைப் பற்றி.....
இவர் 1951 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இராமநாதபுரம் மாவட்டம் நத்தம் அபிராமத்தில் பிறந்தவர். நண்பர்களால் இவர் “கேபிஎஸ்” என்று அன்பாக அழைக்கப்படுபவர். 1968 இல் ௮ப்போதைய அபிராமம் முஸ்லிம் உயர் நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பை முடித்து விட்டு மேற்படிப்பிற்காகச் சென்னை வந்தார்.
இவரது படிப்பு B.Sc (Chemisrty), M.A.(Tamil Lit), B.L.,( Law), and Post Dip in Industrial Safety ஆகும். தனியார் நிறுவனங்களில் (M/s. Indian Organic Chemicals Ltd., Manali, Chennai-68 and M/s. BGR Energy Systems Limited, Teynampet, Chennai-18).
உயர் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சென்னை சைதாப்பேட்டையில் வசித்து வருகிறார். பள்ளி நாட்களிலே கதைகளும் நாடகங்களும் எழுதியவர். ஒவ்வொரு வகுப்பிலும் படிப்பில் முதல் மாணவராகத் திகழ்ந்தவர். விளையாட்டிலும் கெட்டிக்காரர். பள்ளியில் மாணவத் தலைவரகவும் இருந்தவர்.
சென்னை புதுக் கல்லூரி (1968-69- PUC) விடுதில் தங்கிப் படிக்கும் போது விடுதி மாணவர்களுக்காக நடத்தப் பட்ட கட்டுரைப் போட்டியில் இவர் கட்டுரை முதல் பரிசைப்பெற்றது. அதற்கான பரிசையும் பாராட்டுப் பட்டயத்தையும் அப்போதைய முதல்வர் டாக்டர். கலைஞர் சிறப்பு விருந்தினராகக் கல்லூரி விழாவில் கலந்து கொண்டபோது அவரது கையால் பெற்றுக் கொண்டவர். கல்லூரியில் படிக்கும் போது பல கல்லூரி மாணவ மாணவிகள் சேர்ந்து நடத்திய “தேன்மழை” என்னும் மாத இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தவர். அதில் “உள்ளங்கள் பலவிதம்” என்னும் தொடர் கதையும் எழுதியவர்.
படிக்கும் போதே மாலை முரசு நாளிதழில் கவிதை எழுதியவர். சென்னை வானொலியில் பாண்டிச்சேரி அரவிந்த் ஆசிரமம் சென்று ஆய்ந்து அது குறித்துக் கட்டுரையும் வாசித்தவர்.
பணியில் இருந்தபோதே பல நாடகங்களும், கவிதைகளும் எழுதியவர். சென்னை வானொலியிலும், தொலைக்காட்சியிலும் இவரது நாடகமும் மெல்லிசைகளும் “ஒலி,ஒளி”பரப்பானது. இவர் எழுதிய “உன்னை ஒன்று கேட்பேன்” என்ற நாடகம் திரும்பத் திரும்ப வானொலியில் ஒலிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்ணின் பெருமைகள் பற்றி இரண்டு குறும் படங்களும் எடுத்துள்ளார். அம்பத்தூரில் அப்போதிருந்த “Star Recreation Sabha “வின் துணைத் தலைவராக இருந்தவர். சென்னை மணலியில் உள்ள “தமிழ் அன்னை” கலைமன்றத்தின் செயலாளராகப்
பணியாற்றியவர்.
ஏழு ஓரங்க நாடகங்கள் எழுதி சென்னையில் உள்ள பெரிய கலை மன்றங்களில் அரங்கேற்றியும் உள்ளார். வடசென்னையில் உள்ள நன்றாகப் படிக்கும் பொருளாதார வசதி அற்ற மாணவர்களைத் தேடிப்பிடித்து தங்கள் கலை மன்றத்தின் மூலம் பல உதவிகளைச் செய்தவர்.
வட சென்னையில், கண்கள் குறைபாடு உள்ள வசதி அற்ற பெண்களுக்குத் தீபாவளி தோறும் புடைவைகளை வழங்கியவர். இதற்குப் பெரும் உதவிகளைச் செய்தவர்கள் இவரது நிறுவனமும் (IOCL) மற்றும் அப்போதைய IAS Officer ஆக இருந்த திரு K. சம்பத்குமார் அவர்களும் ஆவர். தான் படித்த பள்ளியின் கல்வியில் ஆர்வம் கொண்ட பழைய மாணவர்களை ஒன்று சேர்த்து இப்போது படிக்கும் மாணவர்களையும், ஆசிரியர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காகப் பழைய மாணவர்கள் சங்கம் ஒன்றை 2014 இல் ஆரம்பித்து இது வரை விடாது முறைப்படி நடத்தியும் வருகிறார். அந்தப் பழைய மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் இருந்து பணியாற்றி வருகிறார்.
மரபுக்கவிதைகள் எழுதுவதில் தேர்ச்சி பெற்றவர் என்றாலும் புதுக்கவிதைகள் மீது மிகவும் ஈடுபாடு கொண்டவர். பாரதியார் மற்றும் பாரதிதாசனார் மீது மிகவும் பற்றுக் கொண்டவர்.
எழுத்தாளர் திரு தி.ஜானகிராமன் மற்றும் லா.ச.ராமாமிருதம் இவர்கள் எழுத்துக்களில் மயங்கியவர். 04-09-2021 அன்று சென்னை “பாம்குரோ” ஹோட்டலில் டாக்டர் ஹண்டே (Ex Health Minister) தலைமையில் “சவுத் இந்திய சோசியல் அண்ட் கல்சுரல் அகடாமி” நடத்திய விழாவில் சாதனையாளர் விருதும் பெற்றவர்.
இவர் எழுதிய முதல் புதுக்கவிதைத் தொகுப்பு “புரிதலும் தெரிதலும்” (மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17) உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தால் (அமெரிக்கா) எளிய நடைக்கும் சிறந்த கருத்துக்களுக்காகவும் பாராட்டைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
“வான்சிந்தும் கவிதைகள்” (கவிதா பப்ளிகேசன், சென்னை-17) இவர் எழுதிய இரண்டாவது புதுக்கவிதைத் தொகுப்பாகும். “கேள்வியான பத்தில்கள்” (புதுக் கவிதைத் தொகுப்பு) மற்றும் “ஆழ் மனப்பால் வீதி” (கட்டுரைத்தொகுப்பு) அடுத்த படைப்புக்களாகும்.
தான் படித்த பள்ளியில் வருடா வருடம் பத்தாம் வகுப்பில் ஆங்கிலத்திலும், தமிழிலும் அரசாங்கத் தேர்வில் முதல் மாணவராக / மாணவியராக வருபவருக்கு ரூபாய் ஆயிரம் ஊக்கத்தொகையாக தன் பணத்தை வழங்கி வருகிறார்.
மேலும், சென்னையில் வசதி அற்ற நன்றாகப் படிக்கும் பள்ளி மாணவ மனவியர்களுக்கு (குறைந்தது 30 பேருக்கு) வருடா வருடம் தமது குடும்ப அறக்கட்டளை ( Haji Janab K.P. Shahul Hameed and Sons Charitable Trust, Chennai-15.) மூலம் இலவச நோட்டுப் புத்தகங்களையும் வழங்கி வருகிறார்.
Knowledge is Power God is Great
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | E-3, West Hills, Appaswami Flats, No.7, Reddy Kuppam Road, Saidapet, Chennai, Saidapet, Chennai Taluk, Chennai District, Tamil Nadu 600015, India |
---|---|
[email protected] | |
Phone | 9444135187 |
Website |