Details
Puthiya Thalir Trust is promoted by Pali Mr.Ayyadurai M.A.,D.Ted., COPA., PGDCA at Ulundurpettai. We strive to provide the best service to all our people.
We are providing many services like Educational Guidance, Agricultural Training, Govt Competitive Exam Practice, Blood Donation Guidelines, Medical Camp, Educational Assistance for Poor Students, Coaching for Govt Competitive Exams.
Social Work of Puthiya Thalir Trust:
1. In Government School Campuses Government Higher Secondary School Pali Government Higher Secondary School Elavanasurkottai, Kumaramangalam Model School, Government Vocational Training Center Ulundurpet and in villages like Pali, Pullur, Kanaiyar, Bhu Malayanur, A. Chatanur, Chek Hussain Pettah, Adanur and Police Station Fort Primary Health Center 20 More than thousand saplings are going to be planted on behalf of New Fir Foundation.
2. We have donated blood on behalf of the trust to more than 150 pregnant mothers and surgeons in government hospitals.
3. We are giving coaching for the government competitive exams to the students.
4. We have provided shelter and food items to the victims during rainy season.
5. We have rescued people who had accidents on the Chennai to Trichy highways and admitted them to the government hospital.
6. Students living in rural areas have joined the government school after seeing the dropout students of the school.
7. We have enrolled 70 students from rural areas through the trust in Ulundurpet Govt Vocational Training Centre.
8. We have provided free vocational training to women such as soap making, pinoyel making, sewing training, coconut oil making, camphor making etc.
9. We have given awareness to the public during the Corona period and have provided relief items like food, rice grocery items and vegetable items.
10. We have applied for Aadhaar card and ration card for people living in Ulundurpet area such as black people, black people, transgenders etc. We are doing such work widely in Kallakurichi district and Villupuram district. Awarded to New Fir Foundation on Republic Day to inspire us to do more and more.
PUTHIYA THALIR TRUST ACCOUNT DETAILS:
INDIAN Bank Ulundurpet Branch
A/C No: 7015362624
IFSC: IDIB000U035
MICR: 605019109.
அறக்கட்டளை நிறுவன தலைவர் பாலி திரு. அய்யாதுரை திருசங்கு.
புதிய தளிர் அறக்கட்டளையின் பணிகள்:
• மரக்கன்று வளர்த்தல்
• கல்வி வழிகாட்டுதல்
• விவசாய பயிற்சி
• அரசு போட்டி தேர்வு பயிற்சி
• இரத்த தானம் வழிகாட்டுதல்
• மருத்துவ முகாம்
• ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவிகள்
• அரசு போட்டித்தேர்வுக்கான பயிற்சி அளித்தல்
• பெண்களுக்கான சுய தொழிற்க்கான பயிற்சிகள் போன்ற பல சேவைகளை புதிய தளிர் அறக்கட்டளையின் மூலம் செய்துவருகிறோம்.
புதிய தளிர் அறக்கட்டளையின் சமூக பணிகள்:
1. அரசு பள்ளி வளாகங்களில் அரசு மேல்நிலைப்பள்ளி பாலி அரசு மேல்நிலைப்பள்ளி எலவனாசூர்கோட்டை, குமரமங்கலம் மாதிரிப்பள்ளி, அரசு தொழிற்பயிற்சி மையம் உளுந்தூர்பேட்டை மற்றும் பாலி, புல்லூர், கனையார், பூ மலையனூர், ஏ.சாத்தனூர், சேக் உசேன் பேட்டை, ஆதனூர் போன்ற கிராமங்களில் மற்றும் காவல் நிலையம் கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற பகுதிகளில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மரக்கன்றுகள் புதிய தளிர் அறக்கட்டளை சார்பாக நடப்பட உள்ளது.
2. அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் அறுவைச்சிகிச்சை செய்பவர்களுக்கு 150 மேற்பட்டவர்களுக்கு அறக்கட்டளை சார்பாக இரத்தம் வழங்கி உள்ளோம்.
3. மாணவ மாணவிகளுக்கு அரசு போட்டி தேர்வு பயிற்சி அளித்து கொண்டிருக்கிறோம்.
4. மழை காலங்களில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுத்து தங்கும் வசதி, உணவு பொருட்கள் வழங்கியுள்ளோம்.
5. சென்னை to திருச்சி நெடுஞ்சாலைகளில் விபத்துக்குள்ளான நபர்களை மீட்டெடுத்து அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்.
6. கிராம பகுதியில் வசிக்கும் மாணவ மாணவிகள் பள்ளியின் இடைநிற்றல் மாணவ மாணவிகளை கண்டு அரசு பள்ளியில் சேர்ந்து உள்ளோம்.
7. உளுந்தூர்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அறக்கட்டளை மூலம் கிராமப்புற மாணவர்களை 70 மாணவ மாணவிகளை சேர்த்துள்ளோம்.
8. பெண்களுக்கு இலவச தொழிற்பயிற்சி சோப்பு தயாரித்தல் பினாயில் தயாரித்தல் தையல் பயிற்சி, தேங்காய் எண்ணெய் தயாரித்தல், கற்பூரம் தயாரித்தல் போன்ற பற்சிகளை அளித்துள்ளோம்.
9. கொரோனா காலங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளித்துளோம் மற்றும் நிவாரண பொருட்கள் உணவு, அரிசி மளிகை பொருட்கள் காய்கறி பொருட்கள் வழங்கியுள்ளோம்.
10. உளுந்தூர்பேட்டை பகுதியில் வசிக்கும் நரிக்குறவ மக்கள், இருளர் மக்கள், திருநங்கைகள் போன்றவர்களுக்கு ஆதார் கார்டு, ரேஷன் கார்டு விண்ணப்பம் செய்து பெற்றுத்தந்து உள்ளோம். இது போன்ற பணிகள் கள்ளக்குறிச்சி மாவட்டம், விழுப்புரம் மாவட்டங்களில் பரவலாக செய்து கொண்டு இருக்கிறோம். எங்களை மேலும், மேலும் பணிகளை செய்ய தூண்டுவதற்கு குடியரசு தினத்தன்று புதிய தளிர் அறக்கட்டளைக்கு விருது வழங்கப்பட்டது.
புதிய தளிர் அறக்கட்டளை சார்பில் டாக்டர் B.R.அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் தென்னங்கீற்றில் மூலம் வீடு கட்டி கொடுக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் ஒன்றியம் செஞ்சி குப்பம் கான்ஷிராம் நகரில் புதிய தளிர் அறக்கட்டளை நிறுவனர் தலைவர் பாலி திரு அய்யாதுரை திருசங்கு தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பகுதியில் இருக்கும் மக்களுக்கு தென்னங்கீற்றின் மூலம் வீடு கட்டுதல் இந்தப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக புதிய சிறகுகள் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் திரு. சிவராஜ் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவர் திரு. ஜீவன் ராஜ் கவிஞர். திரு. சாபுவி புதிய தளிர் அறக்கட்டளை நிர்வாகிகள் பேராசிரியர் திரு புகழேந்தி திரு விஜயானந்தன் திரு விஜய் மற்ற நிர்வாகிகள் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பிக்கப்பட்டது.
புதிய தளிர் அறக்கட்டளை புதிய சிறகுகள் காவல் பயிற்சி மையம் சார்பாக பாலி அரசு மேல்நிலைப் பள்ளியின் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி செல்வி. வைஷ்ணவி அவர்களை மருத்துவக் கனவை நிறைவேற்ற நீட் தேர்வுக்கான பயிற்சிக்காக KRISH ACADEMY யில் சேர்க்கப்பட்டுள்ளது சேர்க்கையின் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (ஓய்வு) திரு. வெங்கடேசன் அவர்களும் புதிய தளிர் நிறுவனர் தலைவர் திரு.அய்யாதுரை அவர்கள் செயலாளர் திரு. புகழேந்தி கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் பாலி கிராமத்தைச் சேர்ந்த புதிய தளிர் அறக்கட்டளை நிறுவனரும்,
புதிய சிறகுகள் காவலர் பயிற்சி மையத்தினுடைய பொறுப்பாளருமான திரு. அய்யாதுரை அவர்கள் பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் பயிற்சி மையங்கள் தொழிற் கல்விக்கூடங்கள் என சமூக அக்கறையுடன் 30,000 மரக்கன்றுகளை நட்டிருக்கிறார். சென்னை திருச்சி சாலையில் உளுந்தூர்பேட்டை பகுதியில் விபத்துகள் நடந்தால் அதை உடனடியாக சீர் செய்து அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதல் உதவி செய்தல் கிராமப்புற மாணவர்களுக்கு இலவச பயிற்சி முகாம் நடத்துதல் பெண்களுக்கான தொழில் பயிற்சி நடத்துதல் சமூக விழிப்புணர்வு மையங்களை ஏற்படுத்தி நடத்துதல் ரத்ததானம் வழங்குதல் போன்ற பல்வேறுபட்ட நிகழ்வுகளை நடத்தியமைக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் சிறந்த சமூக சேவைக்கான விருதை மாவட்ட ஆட்சியரிடம் வாங்கி இருக்கிறார்.
புதிய தளிர் அறக்கட்டளை மற்றும் அரசு தோட்டக்கலை துறை இணைந்து மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர்களுக்கு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் ஊரில் வேளாண்மை பயிற்சி காளான் வளர்ப்பு தேனீ வளர்ப்பு பாரம்பரிய காய்கறிகள் நெல் வகைகள் ஆடு மாடு வளர்ப்பு போன்றவர்களை பற்றி பயிற்சிகள் அளிக்கப்பட்டது இதில் வேளாண்மை கல்லூரி பேராசிரியர்கள் தோட்டக்கலை அதிகாரிகள் பயிற்சி அளித்தார்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு பயிற்சிகள் கற்று கொண்டார்கள்.
விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் அறிஞர் எழுத்தாளுமை அண்ணன் திரு.து.ரவிக்குமார் அவர்களிடம் பாராட்டு சான்றிதழ் பெற்றார்.
இன்முகத்துடன் அவரைப் பாராட்டி அவருக்கு பொன்னாடை போர்த்தினார்.
உளுந்தூர்பேட்டை வட்டம் கூவாடு கிராமத்தில் இணையும் கரங்கள் அறக்கட்டளை சார்பாக உலக மகளிர் தின விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது வரவேற்பு உரையாற்றிய திரு. வேலுமணி அவர்கள் சிறப்பு அழைப்பாளர் புதிய தளிர் அறக்கட்டளை நிறுவன தலைவர் பாலிதிரு. அய்யாதுரை திருசங்கு அவர்கள் பேச்சாளர் செல்வி.S. கீர்த்தனா சுய உதவி குழுவின் தலைவர் திருமதி. ராஜவள்ளி பராசக்தி மகளிர் குழு உறுப்பினர்கள் நன்றி உரையாற்றிய திருமதி. கலைச்செல்வி ஆகிய கலந்து கொண்டு மகளிர் தினத்தைப் பற்றி சிறப்பான உரையாற்றினார்கள் மற்றும் இணையும் கரங்கள் அறக்கட்டளையின் நிர்வாகிகள் தூய்மை பணியாளர்களுக்கு மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது ஊர் பொதுமக்கள் மகளிர்கள் கலந்து கொண்டுமகிழ்ச்சி அடைந்தார்கள்.
புதிய தளிர் அறக்கட்டளை சார்பாக நான்காம் ஆண்டு மகளிர் தின விழாவை முன்னிட்டு பெண்களுக்கு சுய தொழில் பயிற்சி ஊதுபத்தி கற்பூரம் சாம்பிராணி கப்பு சாம்பிராணி விளக்கெண்ணை தயாரித்தல் அதனை விற்பனை செய்வது எப்படி உற்பத்தி செய்வது பற்றி மற்றும் காளான் வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட்டது இந்தநிகழ்ச்சியினை தலைமை ஏற்று நடத்திய புதிய தளிர் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் பாலி.திரு அய்யாதுரை திருசங்கு அவர்கள்தலைமை பாலி திரு அய்யாதுரை புதிய தளிர் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் புதிய சிறகுகள் ஐஏஎஸ் அகாடமி உளுந்தூர்பேட்டை
குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கு வைத்து சிறப்புரையாற்றி சிறப்பு விருந்தினர்கள் . இ .மகேஷ் மாவட்டத் துணை காவல் கண்காணிப்பாளர் உளுந்தூர்பேட்டை
த.மனோகரன் தலைமையாசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி பாலி.
ஆசிரியர்கள் திரு அழகுலிங்கம் திரு.வேல்முருகன் தொடக்க விழாவில் கலந்து கொண்டார்கள்.
மாலை நிறைவு விழாசிறப்பு அழைப்பாளர் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்று வழங்கப்பட்டது .
கோ.சுமதி தலைமையாசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசனூர்
பேராசிரியர் திரு. S.சீனிவாசன் அவர்கள்
பாலி ஊராட்சி மன்ற தலைவர் திரு P.சௌந்தரபாண்டியன் அவர்கள், செ.அந்தோணி ஆரோக்கிய செல்வன்
வழக்கறிஞர் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு பெண்கள் முன்னேற்றத்தை பற்றி மிகச் சிறப்பான முறையில் உரையாற்றினார்கள்.
பயிற்சி வழங்கியவர் வே. சீனிவாசன் ஸ்ரீ சீனிவாசன் ரோட்ஸ் நிறுவனர் அத்தியூர்
காளான் பயிற்சி வழங்குபவர்
மா. சாந்தமூர்த்தி அரளி காளான் பண்ணை உரிமையாளர்
அனைவரையும் வரவேற்று மகிழும் அறக்கட்டளை நிர்வாகிகள். சு.புகழேந்தி கே.விஜய் னந்தன் தொ.சிவா.குமரேசன் அ.கார்த்திக் கோ.வினோத் கண்ணன் தே.ரஜினிகாந்த் மோ
குறளரசன்
நன்றி உரை. இரா.விஜய் புதிய தளிர் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் .பயிற்சி பெற்றவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் காளான் பிரியாணி சிறப்பு விருந்தினர்களுக்கு மரக்கன்று கொடுத்தல் புத்தகம் வழங்குதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது.
14.04.2024.கூவாடு மற்றும் ஆதனூர் கிராமத்தில் புரட்சியாளர் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்தநாள் விழாவை மிக சீரும் சிறப்புமாக நடத்திய இணையும் கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் அன்புச் சகோதரர் தோழர் வேலுமணி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்து பணியாற்றி இந்த விழாவை வெற்றி பெற வைத்து மிகச் சிறப்பான முறையில் உணவுகளை பொதுமக்களுக்கு வழங்கி எங்களை புதிய தளிர் அறக்கட்டளை நிறுவனர் தலைவர் பாலி திரு. அய்யாதுரை திருசங்கு என்னை அழைத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செய்த கூவாடு இளைஞர்கள் பெருமக்கள் இந்த கிராமத்தை அறிமுகம் செய்து வைத்த எனது ஆருயிர் தோழர் ஆதனூர் திரு .சத்யராஜ் அவர்களுக்கும் என்னுடன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அன்புச் சகோதரர் தோழர் திரு. வடமலை அவர்களுக்கும் வழக்கறிஞர் திரு. அந்தோணி அவர்களுக்கும் அன்புத்தம்பி வழக்கறிஞர் ராம்குமார் அவர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
2024 ஆம் கல்வியாண்டில் உளுந்தூர்பேட்டையில் அரசு கலைக் கல்லூரி நிறுவ வேண்டி அறக்கட்டளை நிறுவனர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தை தலைமை ஏற்று நடத்திய புதிய தளிர் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் பாலி திரு. அய்யாதுரை திருசங்கு அவர்களின் தலைமையிலும் மற்றும் கல்லூரி அமைப்பதற்கான ஆலோசனை வழங்கிய பேராசிரியர் ராமஜெயம் அவர்கள் நாளந்தா அறக்கட்டளையின் நிறுவனர் திரு. திருமாலவன் அவர்கள் வானவில் அறக்கட்டளையின் நிறுவனர் எம். எஸ் முருகன் அவர்களும் ஆசிரியர் திரு. சந்திரசேகர் அவர்களும் ஆசனூர் மக்கள் நலச் சங்கம் தலைவர் திரு. ஆறுமுகம் சரவணன் தன்னார்வலர்கள் ஆசிரியர்.திரு. கோபிகிருஷ்ணன் .விஜயகாந்த் திரு .விஜய் செல்வா திரு. ராம்குமார் புதிய தளிர் அறக்கட்டளை பொருளாளர் திரு விஜய் னந்தன் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை முன்வைத்து இந்த கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் முன் வைக்கப்பட்டது.
5.6.2024 இன்று உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு புதிய தளிர் அறக்கட்டளை புதிய சிறகுகள் காவல் பயிற்சி மையம் சார்பாக உளுந்தூர்பேட்டை ரயில்வே நிலையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது மற்றும் உளுந்தூர்பேட்டை உழவர் சந்தை முன்பு பொதுமக்களுக்கு ரயில்வே பயணிகளுக்கு 500 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் புதிய தளிர் அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியின் தலைமை ஏற்று நடத்திய புதிய தளிர் நிறுவன தலைவர் திரு. அய்யாதுரை திருசங்கு அவர்கள் நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர்கள் செல்வி. பிரீத்தா திரு. பன்னீர்செல்வம் நகர மன்ற உறுப்பினர் திருமதி. செல்வகுமாரி ரமேஷ்பாபு ரயில்வே துறை அதிகாரிகள் திரு. வடமலை மற்றும் புதிய தளிர் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர்கள் ரா. விஜய் கோ.வினோத் கண்ணா திரு. சிவகுமார் மற்றும் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வளர்ப்பதைப் பற்றி விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டது.
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே. அப்துல் கலாம் அவருடைய நினைவு நாளை முன்னிட்டு ஆசனூர் மக்கள் நலச் சங்கம் தலைவர் திரு. ஆறுமுகம் ஆசனூரில் மரக்கன்று நடுவதற்கு புதிய தளிர்அறக்கட்டளை சார்பாக மரக்கன்றுகள் வழங்கியுள்ளோம் உயிர்கள் வாழ மரங்களை வளர்ப்போம்..
களமருது அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பாலி தமிழ்நாடு சிறப்பு காவல் படை எதிரியில் சுற்றித்திரிந்து கொண்டு இருந்தார்கள் அவர்களை மீட்டெடுத்து அவர்கள் பெற்றோரிடம் தகவல் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தேன் கல்விப் பணியில் புதிய தளிர் அறக்கட்டளை.
இது விளம்பரம் அல்ல விழிப்புணர்வு பள்ளிக்கு செல்லாமல் மாணவர்கள் மூன்று நாட்களாக வெளியில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் மீட்டு எடுத்து பள்ளியில் சேர்ப்பது அவர்கள் பெற்றோரிடம் ஒப்படைத்து பள்ளிக்கு செல்ல வைப்பது அறிவுரை வழங்கப்பட்டது இந்த மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்து அறிவுரை வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது கல்வி பணியில் புதிய தளிர் அறக்கட்டளை உளுந்தூர்பேட்டை.
15.08.2024 இன்று 78 வது சுதந்திர தின விழா முன்னிட்டு புதிய தளிர் அறக்கட்டளை சார்பாக உளுந்தூர்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் துணைத் தலைவர் நகராட்சி ஆணையர் நகர மன்ற உறுப்பினர் தூய்மை பணியாளர்கள் புதிய தளிர் அறக்கட்டளை நிர்வாகிகள் ஆகியோர் கலந்து மரக்கன்றுகள் உயிர்கள் வாழும் மரங்களை வளர்ப்போம் மற்றும் மரம் வளர்ப்பை பற்றி விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது புதிய தளிர் அறக்கட்டளை.
18.08.2024 இன்று புதிய தளிர் அறக்கட்டளை புதிய சிறகுகள் காவலர் பயிற்சி மையம் சார்பாக உளுந்தூர்பேட்டை வட்டம் குணமங்கலம் கிராமத்தில் மரக்கன்றுகள் ஆலமரம், அரசமரம், இலுப்பை மரம் ,நீர்மருது, புங்கை மரம், வேப்பமரம், புளியமரம், பூவரசு ஆகிய 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் குணமங்கலம் சாலை ஓரமாக நடப்பட்டது மற்றும் மரம் வளர்ப்பை பற்றி விழிப்புணர்வு கல்வி விழிப்புணர்வு இளைஞர்களுக்கு கொடுக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் புதிய தளிர் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் பாலி திரு .அய்யாதுரை திரு சங்கு தலைமையிலும் நிகழ்ச்சியின் வரவேற்புரை ஆற்றிய திரு. உதயகுமார் அவர்களும் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய புதிய தளிர் அறக்கட்டளை நிர்வாகிகள் பேராசிரியர் திரு.புகழேந்தி திரு. ராம்குமார் மற்றும் நன்றி உரையாற்றிய திரு .ஏழுமலை குணமங்கலம் இளைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடப்பட்டது. உயிர்கள் வாழும் மரங்களை வளர்ப்போம்.
புதிய தளிர் அறக்கட்டளை புதிய சிறகுகள் காவல் பயிற்சி மையம் சார்பாக சுங்கம் மற்றும் மத்திய கலால்துறை உதவி ஆணையராக பணிபுரிந்த ஓய்வு பெற்ற பாவலர் உயர்திரு சு. சண்முகசுந்தரம் அவர்களுக்கு நடைபெற்ற பணிநிறைவு பாராட்டு விழாவில் உளுந்தூர்பேட்டை வட்டம் செம்மணங்கூர் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கு செல்வி. சண்முகப்பிரியா அவர்களுக்கு கல்வி கட்டணம் ரூபாய் 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கியுள்ளார் மற்றும் இந்த நிகழ்ச்சியில் தலைமை புதிய தளிர் அறக்கட்ட நிறுவன தலைவர் திரு அய்யாதுரை திருசங்கு முன்னிலை கல்லை மாவட்ட முத்தமிழ் சங்க தலைவர் கவிஞர் நடிகர் திரு. முருககுமார் அவர்கள் வரவேற்புரை விஜய்னந்தன் வாழ்த்துரை திரு முத்துவேல் அவர்கள் வழக்கறிஞர்கள் . அந்தோணி ஸ்டீபன் ராம்குமார் தலைமை காவலர்கள் திரு சத்யராஜ் திருமதி. மேகவள்ளி ஆமினா சிவா மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் ஓட்டுனர் திரு மணிகண்டன் புதிய தளிர் அறக்கட்டளை நிர்வாகிகள் விஜய் பாஸ்கர் சகுந்தலா ஜீவிதா அரவிந்த் புகழேந்தி புதிய தளிர் அறக்கட்டளை செயலாளர் நன்றி உரை வழங்கினார் மற்றும் அனைவரும் சேர்ந்து பாவலர் திரு. சண்முகசுந்தரம் அவர்களுக்கு திருவள்ளுவர் சிலையை நினைவு பரிசாக வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.
20.09.2024 இன்று Center Footwear Training Institute மற்றும் இணைந்து வழங்கும் புதிய தளிர் அறக்கட்டளை மத்திய காலனி பயிற்சி நிலையம் வழங்கும் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச தொழில் பயிற்சி 38 நாட்களுக்கான பயிற்சி இன்று பில்லூர் கிராமத்தில் உள்ள 40 பெண்களுக்கு இலவச பயிற்சி தொடங்கப்பட்டது இந்த நிகழ்ச்சி தலைமை ஏற்று நடத்திய புதிய தளிர் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் திரு அய்யாதுரை திருசங்கு வரவேற்புரை விஜய் முன்னிலை திரு. விமல் பில்லூர் ஊராட்சி மன்ற தலைவர் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த எடைக்கல் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யால குருகுலத்தின் அம்பா அவர்களும் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு ஜெயராமன் அவர்களும் பயிற்சியாளர் குமரன் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி புத்தகங்கள் பேனா நோட்டு பென்சில் யூனிஃபார்ம் போன்ற உபகரணங்கள் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டது மற்றும் நிகழ்ச்சியின் இறுதியாகபொது சேவை மைய கட்டிடத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது மற்றும் நிகழ்ச்சியில் நன்றி உரையாக புதிய தளிர் நிர்வாகி திரு. பாஸ்கர் அவர்கள் கூறியுள்ளார் .
ஏபிஜே அப்துல் கலாம் ஐயாவின் பிறந்த நாளை முன்னிட்டு பூ மலையனூர் கிராமத்தில் புதிய தளிர் அறக்கட்டளை சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் திரு வீரமணி அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சி இணை சிறப்பித்தார்.
15.10.2024 இன்று Center Footwear Training Institute மற்றும் இணைந்து வழங்கும் புதிய தளிர் அறக்கட்டளை மத்திய காலனி பயிற்சி நிலையம் வழங்கும் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச தொழில் பயிற்சி 38 நாட்களுக்கான பயிற்சி இன்று பூ மலையனூர் கிராமத்தில் உள்ள 40 பெண்களுக்கு இலவச பயிற்சி தொடங்கப்பட்டது இந்த நிகழ்ச்சி தலைமை ஏற்று நடத்திய புதிய தளிர் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் திரு. அய்யாதுரை திருசங்கு வரவேற்புரை விஜய் முன்னிலை திரு. பாலு பூ மலையனூர் ஊராட்சி மன்ற தலைவர் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தின் ஆய்வாளர் திரு வீரமணி அவர்கள் அவர்களும் மற்றும் பயிற்சியாளர் குமரன் ராஜா பயிற்சியாளர்களுக்கு பயிற்சி புத்தகங்கள் பேனா நோட்டு பென்சில் யூனிஃபார்ம் போன்ற உபகரணங்கள் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டது மற்றும் நிகழ்ச்சியின் இறுதியாக பொது சேவை மைய கட்டிடத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது மற்றும் நிகழ்ச்சியில் நன்றி உரையாக பொன் தமிழன் அவர்கள் கூறியுள்ளார்.
24.10.2024 இன்று Center Footwear Training Institute மற்றும் இணைந்து வழங்கும் புதிய தளிர் அறக்கட்டளை மத்திய காலனி பயிற்சி நிலையம் வழங்கும் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச தொழில் பயிற்சி 38 நாட்களுக்கான பயிற்சி இன்று ஏ.சாத்தனூர் கிராமத்தில் உள்ள 35 பெண்களுக்கு இலவச பயிற்சி தொடங்கப்பட்டது இந்த நிகழ்ச்சி தலைமை ஏற்று நடத்திய புதிய தளிர் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் திரு. அய்யாதுரை திருசங்கு அவர்கள் முன்னிலை திரு. சந்திரலேகா தேவராஜ் ஊராட்சி மன்ற தலைவர் துணைத் தலைவர் பிரியா குணசேகரன் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த எடைக்கல் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் திரு. ராமதாஸ் அவர்கள் அவர்களும் தலைமைக் காவலர் திரு.சுபின் அவர்கள் மற்றும் பயிற்சியாளர் திரு .விஜயராகவன் ஊராட்சி செயலாளர் திரு. பாலச்சந்தர் வார்டு உறுப்பினர்கள் ஏழுமலை பரமேஸ்வரி அவர்கள் சிவகாமி ஏழுமலை அவர்கள் கலந்துகொண்டு பயிற்சியாளர்களுக்கு பயிற்சி புத்தகங்கள் பேனா நோட்டு பென்சில் யூனிஃபார்ம் போன்ற உபகரணங்கள் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டது மற்றும் நிகழ்ச்சியின் இறுதியாக பொது சேவை மைய கட்டிடத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது மற்றும் நிகழ்ச்சியில் நன்றி உரையாக முத்தழகி கூறியுள்ளார்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து மக்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Featured Video
Address | Salem Main Road, Ulundurpettai, Ulundurpettai Taluk, Kallakkurichi District, Tamil Nadu 606107, India |
---|---|
[email protected] | |
Phone | 9047130246, 9629778317 |
Website |