Details
Thainadu Animal Live Stock Protection Welfare and Development Trust is promoted by K.Rajalingam at Dharmapuri. We strive to provide the best service to everyone.
Trustee:K.Rajalingam
we provide the best tamilnadu animal livestock production welfare and development.
We are proud to present the certificate for public awareness and public service during the Corona crisis.
ACCOUNT DETAILS:
Thainadu Animal livestock protection welfare and development trust
Indian Bank,Thippampatti X-Road
A/C. NO: 6297190951
IFSC Code:IDIB000T170
Regd Office:
No.1/257, Thippampatti Post, Karimangalam Tk, Dharmapuri Dt -635202.
Branch Office:
No.5/518A, Thiruppattur Main Road, Arasampattai -635201.
நாங்கள் சிறந்த தமிழ்நாடு விலங்கு கால்நடை உற்பத்தி நலன் மற்றும் மேம்பாட்டை வழங்குகிறோம்.
தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியம், பன்னிகுளம் ஊராட்சி, கொல்லாபுரியம்மன் கோயில் அருகில், சாலையில் அடையாளம் தெரியாத வாகணம் மோதி விபத்தில் இறந்த நாய் அனாதையாக இருப்பது நம் கவணத்திற்கு வர ஊராட்சி மன்ற தலைவர் செல்வன்.D.வெற்றிச்செல்வன் அவர்களிடம் நாம் அளித்த தகவலின் அடிப்படையில் விலங்குகள் நல ஆர்வலரும், தூய்மை பணியாளருமானதிரு V.மாதேஸ் அவர்களின் உதவியுடன் நல்லடக்கம் செய்யப்பட்டதற்கு-(TAPWT) அறக்கட்டளையின் சார்பாக ஊராட்சி மன்ற நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டு தலை தெரிவித்துக்கொள்கிறோம்.
06 - 10 - 2021 அன்று தாமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டி வட்டம், குண்டல்மடுவு முனுசாமி வயது 38 என்பவர் காட்டுபன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி உயிரழப்பு கள ஆய்வு - 14 - 10 - 2021 இன்று சம்பவ இடம்.
O 1-11 - 2021 இன்று மாலை 4.40 மணியளவில் தர்மபுரி to திருப்பத்தூர் சாலையில் குப்பூர் பிரிவு சாலையில் அடையாளம் தெரியாதவாகனம் மோதி படுகாயம் அடைந்த தெருநாயை பாதுகாப்பாக சிலம்பரசன் விலங்குகள் நல ஆர்வலர் அப்புறபடுத்தினார் அவருக்கு நமது TAPWT சார்பாக நன்றியையும், வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நேரில் தெரிவிக்கப்பட்டது.
தர்மபுரி Dt, tk, கிருஷ்ணாபுரம் பகுதியில் சர்வதேச விலங்குகள் தினவிழாவை முன்னிட்டு மதியம் 12.30 மணியளவில் வீடில்லாவிலங்குகளுக்கு விருந்து - TAPWT.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கெட்டூர் பிரிவு சாலையில் 10 - 12 - 2021-1.30 மணியளவில்,கழுத்தில் கம்புடன் கூடிய நாய்க்கு சர்வதேச விலங்குகள் தினவிழாவும், மனித உரிமைகள் தினவிழாவையும் முன்னிட்டு உணவளித்தபோது -TAPWT.
சென்ற 06-11-2021 அன்று சாலையோரம் அனாதையாக இறந்த நாயின் உடலை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி அடக்கம் செய்த நல் உள்ளங்களை காரிமங்கலம் ஒன்றியம் கேத்தனள்ளி ஊராட்சி மன்ற தலைவர், செயலாளர், தூய்மை பணியாளர்கள் சார்பாகவும், விலங்குகள் நல ஆர்வலர்கள் சார்பாகவும்- தேசிய விலங்குகள் நல வாரியம் சார்பாகவும் 10-12.2021 சர்வதேச விலங்குகள் தினவிழாவில் பொன்னாடை அணிவித்து பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
திருவணனா மலை மாவட்டம், செங்கம் வட்டம், உச்சிப்பாளையம் வீடில்லாவிலங்குகளுக்கு விருந்து அளிக்கப்பட்டது.
31.12.2021 இன்று மதியம் சுமார் 1.00 மணியளவில் தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், எர்ரசீகல அள்ளி சின்னு கன்னு மகன் மாதன் அவர்களின் 9 மாத பெண் மாடு திடீரென்று இறந்துவிட்டது அதன் இறுதி மரியாதை செய்யப்பட்டது.
நாங்கள் கொரோனா தொற்று பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும்,பொது சேவையிலும் சிறப்பாக செயல்பட்டமைக்கு சான்றிதழை பெருமையுடன் வழங்குகிறோம்.
07-03-2023 அன்று தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், காளிகான் கொட்டாய் சக்திவேல் என்பவர் நிலத்தில் மூன்று யானைகள் திருட்டுமின்சாரத்தில் இறந்த சம்பவத்திற்கான கள ஆய்வு குழு சென்று பிரேத பரிசோதனை முடித்து மண்ணடக்கம் செய்தபின் TAPWTன் 2035 பிரேதமாக கண்ணீர் அஞசலி செலுத்தப்பட்டது. இந்த குழுவின்கள ஆய்வுக்கான வாகன வசதி, உணவு வசதிகள் செய்து கொடுத்த நல் உள்ளங்களுக்கு குழு உறுப்பினர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் - TAPWT.
10-03-2023 இன்று தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியம், வகுரப்பம்பட்டி ஊராட்சியில் சமூக நாய் மர்மமான முறையில் தூக்கிலிட்டு இறந்து கிடந்ததையொட்டி கம்பைநல்லூர் காவல்நிலையத்தில் TAPWT நிர்வாகம் புகார் மனு அளித்து பிரேத பரிசோதனை செய்தபின் மண்ணடக்கம் செய்து TAPWTன் 2036வது பிரேதமாக இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
16 - 03 - 2023 இன்று தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம் பன்னி குளம் ஊராட்சி திப்பம்பட்டி to கம்பைநல்லூர் சாலையின் ஓரம் தனியார் பெட்ரோல் பங்க் எதிரில் சமூக நாய் ஒன்று இறந்துகிடந்ததால் கிருஷ்ணாபுரம் காவல் உதவி ஆய்வாளர் அவர்களின் ஆலோசனையின்படியும், ஊராட்சி நிர்வாகத்தின் தலைமையில்,TAPWTன் 2038வது சமூக பிரேதமாக மண்னடக்கம் செய்து இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூர் உள்வட்டம் கெலவள்ளி கிராமத்தில் மின்சாரம் தாக்கி 18.03.2023 இன்று காலை 9.30 மணியளவில் யானை ஒன்று இறந்துவிட்டது அறிந்து நேரில் சென்று வனத்துறையினர் பிரேத பரிசோதனை நடத்தியதை உடனிருந்து கண்காணித்து மாலை 7.05 மணிக்கு பாதுகாப்பாக மண்டைக்கம் செய்து TAPWTன் 2038வது பிரேதமாக இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம்&ஒன்றியம், கொளகம்பட்டி ஊராட்சி, K. வாழைத்தோட்டம் கிராமத்தில் சமூக நாய்களை சமூக விரோதிகள் துண்புறுத்தியதில் தனிநபர் வீட்டில் அடைக்கலம் புகுந்த காரணத்தால், 1962 என்ற எண்ணில் அவசர ஊர்தியை,தொடர்ந்து 3 நாட்களாக மருத்துவ உதவி வேண்டியும் வராத காரணத்தால் 22-03-2023 காலை 10.30 மணியளவில் இறந்துவிட்டதால் முறையாக காவல்துறை, வருவாய்துறை, ஊராட்சி துறைகளுக்கு தகவல் அளித்தும் இன்று அரசு விடுமுறை என கூறி துப்புறவு பணியாளார்கள் வராத காரணத்தால் நமது கள ஆய்வு குழு நேரில் சென்று TAP WTன் 2039வது பிரேதமாக இறுதி அஞ்சலி செலுத்தி மண்ணடக்கம் செய்யபட்டது.
06-04-2023 அன்று சேலம் மாவட்டம், காடையம்பட்டி வட்டம், வேப்பிலை ஊராட்சி, செக்காரப்பட்டி கிருஷ்ணன் மனைவி கோமதி அவர்கள் வளர்ப்பு சினை பசுமாடு ஒன்றும், வெள்ளாடுகள் ஐந்தும் மர்மமான முறையில் இறந்ததையொட்டி 07. 04.2023 இன்று பிரேத பரிசோதனையின்போது கள ஆய்வு குழு நேரில் சென்று TAPWTன் 2041 to 2046வது பிரேதமாக இறுதி அஞ்சலி செலுத்தி மண்ணடக்கம் செய்யப்பட்டது.
08-05 - 2024 இன்று காலை நடந்த மின்சார விபத்தில் இறந்த இரண்டு சினை மாத பசுக்களின் சம்பவ இடத்தில் கள ஆய்வு செய்து TAPWT ன் 2066,2067வது பிரேதமாக இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
சிறந்த சேவையை அனைவர்க்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.6-A, Upstair,4th Street, Bharathipuram, Dharmapuri, Dharmapuri Taluk, Dharmapuri District, Tamil Nadu 636705, India |
---|---|
[email protected] | |
Phone | 9443847459, 8939813361 |
Website |