Aram Wood Toys Manufacturer
Details
Aram Wood Toys is promoted by S.Sivaramakrishnan at Ambasamudram.
We work hard to provide excellent customer service to all our clients.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கைவினை கலைஞர்களால் 18 ஆம் நூற்றாண்டில் இருந்து தயாரிக்கப்படும் சொப்பு சாமான்களுக்கு விரைவில் புவிசார் குறியீடு வழங்கப்பட உள்ளது.
இந்த தனித்துவமான பொம்மைகள்தான் உலகறியச் செய்யும் புவிசார் குறியீட்டை பெற உள்ளன. என்னதான் பல இடங்களில் இந்த சொப்பு சாமான்கள் தயாரிக்கப்பட்டாலும், அம்பாசமுத்திரம் பகுதியில் தயாரிக்கப்படும் சொப்பு சாமான்கள் மிகவும் பிரபலமானவை. இன்னும் சிலர் வீடுகளிலும் இந்த சொப்பு சாமான்களை காண முடியும். அவை, அவற்றின் தரம் மற்றும் வண்ணங்களுக்கு பெயர் போனவை.
ஆண்டு முழுவதும் இந்த அழகழகான சொப்பு சாமான்கள் சந்தைகளில் விற்கப்பட்டாலும், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பொம்மைகளின் திருவிழாவாக கொண்டாடப்படும் இந்துக்களின் பண்டிகையான நவராத்திரி கொலுவின் போது பிரதான விற்பனையை சந்திக்கின்றன.
இப்படி மரத்தாலான பொம்மைகளின் சந்தை இப்போது மாற்றங்கள் கண்டுள்ளன. பல பல புதுமையான வடிவங்களில் மினியேச்சர் பொம்மைகள் வந்தாலும், தரத்திற்கும், நச்சு கலக்காத தன்மைக்கும் சாட்சியாகவும் பாரம்பரிய முறையில் கைவினை கலைஞர்களால் உருவாக்கப்படும் சொப்பு சாமான்களுக்கு இன்றும் தனி மவுசு உண்டு.
இவை இயற்கை வளங்களைக் கொண்டு தயாரிக்கப்படுவை என்பதால் இந்த சொப்பு சாமான்கள் மறுசுழற்சி செய்யக்கூடியவை.
தாழம்பூ இலைகள், பதப்படுத்தப்பட்ட மரக்கட்டைகள் போன்ற இயற்கை வளங்களிலிருந்து தயாரிக்கப்படுவதால் அவை நச்சுகள் கலக்காத பொம்மைகளாகின்றன.
சொப்பு சாமான்களுடன் குழந்தைகள் விளையாடும்போது அதை தவறுதலாக அவர்கள் கடித்துவிட்டாலும் உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்கும் என்கின்றனர் அவற்றை தயாரிக்கும் கைவினை கலைஞர்கள்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.94, Balaji Theatre Road, Orkad, Ambasamudram, Ambasamudram Taluk, Tirunelveli District, Tamil Nadu 627401, India |
---|---|
[email protected] | |
Phone | 9750455917 |
Website |