Details
Kattumana Thozhilalar Matrum Amaippusara Thozhilalar sangam is Located by Salem.
திராவிட தொழிலாளர் நல சம்மேளனம்
பதிவு எண்:1226/SLM/07
பொதுச்செயலாளர்:ஆ.கதிர்வேல்
கட்டுமான தொழிலாளர் மற்றும் அமைப்புசாரா தொழிளாளர்கள் ஆன்லைன் மூலம் நலவாரியத்தில் பதிவு செய்து பயன்பெற
திராவிட தொழிலாளர் நல சம்மேளனம்
பதிவு எண்:1226/SLM/07
தொடர்பு எண்: 9443824988,9994266418
(கட்சி சார்பற்றது)
கட்டுமான தொழிலாளர் நலன் பாதுகாக்க, பணி பாதுகாப்பு ஏற்படுத்த, தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு கடந்த 1980 ல் கட்டுமான தொழிலாளர் சங்கம் தொடங்கி தொழிலாளர்களுக்காக நலவாரியம் வேண்டும் என போராடி உரிமைகளை பெற வேண்டும் என்ற கொள்கைக்காக பாடுபட வேண்டும் என்ற உயரிய லட்சியத்தோடு பயணித்து அதன் விளைவாக, 1982 ம் ஆண்டு உடலுழைப்பு தொழிலாளர் சட்டத்தின் கீழ் 1994 ல் தமிழக அரசால் நலவாரியம் அமைத்து வெற்றிப்பெற்றோம். இது தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்கத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. இதில் கட்சி பிடியில் உள்ள தொழிற்சங்ககளின் பங்களிப்பு ஏதும் இல்லை. இதனை தொடர்ந்து சுதந்திரமான தொழிற்சங்ககளின் பல்வேறு போராட்டத்தால் 1999 ல் அமைப்புசாரா நலவாரியம் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டு இதில் 15 தொழில்சார்ந்த நலவாரியம் அமைக்கப்பட்டது. இதில் ஆட்டோ தொழிலாளர் நலவாரியம், கட்டுமானம் என மொத்தம் 17 நலவாரியம் தமிழக அரசால் தொழிலாளர் துறையின் கீழ் செயல்பட்டுவருகிறது. கட்டுமான நலவாரியத்தில் 53 வகையான தொழில்கள், அமைப்புசாரா நலவாரியத்தில் 60 வகையான தொழில்கள் உள்ளடக்கி 18 முதல் 60 வயதுக்குள் உள்ள தொழிலாளர்களை பதிவு செய்து பணப்பயன் பெற்று தருவதில் கடந்த 35 ஆண்டுகளாக சிறந்த சேவையை செய்து வருகிறோம்.
கடந்த 20-06-2020ல் தமிழக அரசு தொழிலாளர் ஆன்லைன் மூலம் நலவாரியத்தில் பதிவு செய்ய வழிவகை செய்து நடைமுறைப் படுத்திவருகிறது.இதில் தொழிலாளர் பதிவு செய்ய (VAO) சான்று நேரில் பெற வேண்டும் என்ற நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என நமது திராவிட தொழிலாளர் நல சங்கத்தில் பொதுச் செயலாளர் திரு. கதிர்வேல் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து தற்போது ஆன்லைன் மூலமாக VAO சான்று பெற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து முழுமையாக VAO பரிந்துறை ரத்து செய்ய வேண்டும் என்பதை தற்போது மேல்முறையீடு வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதில் வெற்றி பெறுவோம்.
திராவிட தொழிலாளர் நல சம்மேளனம்
உருவாக்கம்: 24/09/2007
நோக்கம்: கட்டுமான தொழிலாளர் மற்றும் அமைப்புசாரா தொழிளாளர் நலன் மற்றும் மேம்பாடு
அமைவிடம்: 132, முத்துநாயக்கன்பட்டி மெயின் ரோடு சுந்தர் நகர் பஸ் ஸ்டாப், சேலம் 636302.
சேவை: தமிழ்நாடு முழுவதும்
வலைத்தளம்:-
1.ஆன்லைன் மூலம் நலவாரிய உறுப்பினர் பதிவு செய்தல்
2.தொழில் தகராறு சட்டபடி தீர்வு காணுதல்
3.நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு பணபயன் பெற்று தருதல்
நலத்திட்ட உதவிகள்:-
1. கல்வி உதவித்தொகை : ரூ.1000/-
உயர்கல்வி விடுதியில் தங்கி படித்தால் : ரூ.8000/-
2. திருமண உதவித்தொகை ஆண் : ரூ.3000/-
திருமண உதவித்தொகை பெண் : ரூ.5000/-
3. மகப்பேறு : ரூ.6000/-
4. கண்கண்ணாடி : ரூ.500/-
5. ஓய்வுதியம் : ரூ.1000/-
6. குடும்ப ஓய்வுதியம் : ரூ.500/-
7. விபத்து மரணம் : ரூ.1லட்சம்/-
8. பணியிடத்தில் விபத்து மரணம் : ரூ.5லட்சம்/-
9. இயற்கை மரணம் & ஈமச்சடங்கு : ரூ.25000/-
சிறந்த சேவையை எங்கள் அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
எங்களது சங்கத்தில் உறுப்பினராக சேர்வதுக்கு நீங்கள் கீழே உள்ள Contact Form ல் உங்களுடைய பெயர், மெயில் ஐடி, மொபைல் நம்பர், முகவரி போன்ற தகவல்களை அனுப்பவும்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Featured Video
Address | No.132,Muthunayaikkanpatti Main Road,Sundar Nagar Bus stop, SALEM TOWN, Salem Taluk, Salem District, Tamil Nadu 636302, India |
---|---|
[email protected] | |
Phone | 9443824988, 9994266418 |
Website |
Send Email to business
Recent reviews
Vathsala
Posted on: May 19, 2023
How to apply
C p magizh
Posted on: May 27, 2022
No comment
C p magizh
Posted on: May 27, 2022
No comment
C p magizh
Posted on: May 27, 2022
No comment
Arunkumar
Posted on: Sep 24, 2021
Very Very nice
Rajendran
Posted on: Sep 24, 2021
Very nice