Details
Guruvu Seenivasan Special Skill Development Educational Charitable Trust is promoted by Dr. S. VasanthaRaj BAJM, (LLB), DCA, DTC, JAP, GS, Gem Num at Bodinayakanur.
Our Services:
1. Help To Unsupported Children
2. Feeding The Needy
3. Planting Trees
4. Help To Handicapped Persons
5. Blood Donation
6. Field Work.
அறக்கட்டளையின் நோக்கம் :
*பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் இலவசமாக மரக்கன்றுகள் நடுதல்.
*நீர்நிலைகளை பாதுகாப்பது மற்றும் அவற்றின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
*கிராமப்புறங்கள் மற்றும் பொது இடங்களை சுத்தம் செய்வது.
*அரசு பள்ளியில் படித்த மாணவர்களின் பள்ளி மற்றும் கல்லூரி மேற்படிப்புக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் நிதி உதவிகள் வழங்குவது.
*இரத்ததானம் செய்வது மற்றும் அது குறித்து விழிப்புணர்வுகள் செய்வது.
*அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி வகுப்புகள், நுழைவுத்தேர்வுக்கு தேவையான சிறப்பு வகுப்புகள் மற்றும் தொழிற் பயிற்சிகளை இலவசமாக வழங்குவது.
*கிராமப்புறங்களில் இலவச மருத்துவம் மற்றும் பரிசோதனை முகாம்களை ஏற்பாடு செய்து மக்கள் பயன் பெற வழிவகை செய்தல்.
*படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கு உதவி செய்வது மற்றும் வழிகாட்டுதல்.
*போக்குவரத்துக்கு விதிமுறைகள், தண்ணீர் சிக்கனம், மின்சார சிக்கனம், நெகிழி தவிர்ப்பு, போதை பழக்கம் தடுப்பு போன்ற விழிப்புணர்வுகளை நடத்துவது.
*விவசாயத்தில் இளைஞர்களை செயல்பட ஊக்குவித்தல் மற்றும் அவற்றின் அவசியம் குறித்து விழிப்புணர்வு செய்தல்.
*அரசின் சலுகைகளை கிராமப்புற மக்கள் பயன்பெற இலவச இ -சேவை முகாம்களை அமைத்தல்.
*சமூக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான வழியை கிராமப்புற மக்களுக்கு ஏற்படுத்துதல்.
*பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது.
*இயற்கை பேரிடர் நேரங்களில் மீட்பு மற்றும் உதவிகளை மேற்கொள்ளுதல்.
*ஆதரவற்ற மற்றும் ஊனமுற்றோர் இல்லங்களுக்கு தேவையான உதவிகளை செய்வது.
அறக்கட்டளையின் முக்கிய குறிக்கோள்:
1.ஆண்டுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுதல்.
2.ஐம்பது மாணவர்களுக்கு கல்வி படிக்க உதவுதல்.
3.மாதம்தோறும் ஒரு அரசு பள்ளிக்கு உதவுதல்
டிரஸ்டின் நோக்கங்கள் :
- இந்த டிரஸ்ட் மூலம் கிராமப்புறம், நகர்ப்புறம், ஏழை, எளிய மற்றும் பழங்குடியினர் மக்களின் கல்வி வளர்ச்சிக்கு, திறன் மேம்பாட்டிற்கும், சுயதொழில் முனைவோர் உருவாக்குதலுக்கும் பாடுபட்டு வருகிறோம்.
- இந்த டிரஸ்ட் மூலம் பெண்கள் அமைப்புடன் இணைந்து சேமிப்பு மற்றும் அரசு , தனியார் வங்கிகளிலும் , இதர வெளி நபர்களிடமிருந்து , வெளிநாட்டினரிடமும் , கடன்கள் பெறவும் , திரும்ப செலுத்தவும், மனிதவள மேம்பாட்டுத்துறையினரின் விதிகளுக்கு உட்பட்டு செய்து வரவேண்டிய ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.
- இந்த டிரஸ்ட் மூலம் ஆரம்ப , நடுநிலை, உயர்நிலை பள்ளிகள், கல்வி , கலை , இசை , அறிவியல் , இலக்கியம், திறன் மேம்பாட்டு மருத்துவ கல்லூரிகள் ,போன்றவை நிர்வகித்தும், சிறப்பான முறையில் நடத்தி அனைவருக்கும் சமூக சேவை செய்து வருகின்றோம்.
- இந்த டிரஸ்ட் மூலம் அனைத்து கல்வி பயிற்சி திறன் மேம்பாட்டு பயிற்சி, விவசாய பயிற்சி , கணினி பயிற்சி , கலைப்பயிற்சி , ஓவியப்பயிற்சி , ஆடை வடிவமைப்பு, ஆபரண வடிவமைப்பு, நகை மதிப்பீடு, நவரத்தின மதிப்பீடு, யோகப்பயிற்சி, தற்காப்பு கலை பயிற்சி, தொழில் முனைவோர் உருவாக்குதல் பயற்சி போன்றவற்றை வழங்கி தேவையான மையங்கள் அமைத்து அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்.
- இந்த டிரஸ்ட் மூலம் அனைத்துவித ஆண்களும், பெண்களும் பயன் பெரும் வகையில் திறன் மேம்பாட்டு , சுய தொழில் முனைவோரை உருவாக்கி குழந்தை காப்பகங்கள், பெண்கள் விடுதிகள், முதியோர் இல்லங்கள், போதை அடிமைகள், மறுவாழ்வு மையங்கள் மற்றும் அனாதை இல்லங்கள் போன்றவற்றை ஏற்படுத்தி அதன்மூலம் அனைவருக்கும் தொண்டு செய்து வருகிறோம்.
- இந்த டிரஸ்ட் மூலம் அனைத்து வயதினர்களும் மனமகிழ்வுடன் , வாழ்கை வாழ்ந்துவர சிறுவர் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், திரையரங்குகள், உணவு விடுதிகள் மற்றும் உல்லாச விடுதிகள் வாழவேண்டிய அனைத்து நற்காரியங்களை செய்து வருகிறோம்.
- இந்த டிரஸ்ட் மூலம் இயற்கை மற்றும் அனைத்து உயிரிகளின் பாதுகாப்பு கருதி , அனைவருக்கும் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களை சுத்தமானதாகவும், சுகாதாரமானதாகவும், பாதுகாப்பு ஆனதாகவும் வைத்து கொள்ளவும் மரம் வளர்த்தல், மண்வளப்பாதுகாப்பு, நீர்வளமேலாண்மை பெருக்குதல், வனப்பாதுகாப்பு,ம் இயற்கை தாவரங்களை பாதுகாத்தல், அறிய வகை விலங்குகள் , பறவைகள் பாதுகாப்பு போன்ற அனைத்தையும் மக்களுக்கு எடுத்துக்கூறி அதற்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம்.
- இந்த டிரஸ்ட் மூலம் மக்களின் அறியாமை போக்கிடும் வகையில் பழக்க வழக்க பயன்பாட்டு கலாச்சார சிந்தனை சமுதாய நடைமுறை பெண்ணடிமைகள், பாலியல் கொடுமைகள், வரதட்சணை கொடுமைகள், பெண் சிசுக்கொலை போன்றவற்றை அகற்றுவதற்கும் தேவையான அனைத்துவித நடவடிக்கையும் , கற்றுக்கொடுக்க வேண்டிய விழிப்புணர்வு முகாம்களையும் ஏற்பாடு செய்து வருகிறோம்.
- இந்த டிரஸ்ட் மூலம் சுயதொழில் முனைவோர் மூலம் உருவாக்கிய கைவினை கலைஞர்கள் உற்பத்தி பொருட்கள் விற்பனை மையம் ஏற்படுத்தி பால்பண்ணைகள், மாட்டுத்தீவனங்கள், ரைஸ்மில், உர விற்பனை போன்றவற்றை ஆரம்பித்து நிர்வகித்து வருகிறோம்.
- இந்த டிரஸ்ட் மூலம் இலவச ரத்ததான முகாம்கள், கண்தான முகாம்கள், இலவச கண்மருத்துவம் போன்றவற்றின் மூலம் அனைவருக்கும் இலவச சிகிச்சைகள் ஏற்பாடு செய்து வருகிறோம்.
- இந்த டிரஸ்ட் மூலம் குழந்தை தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டு வளர்ச்சிக்கு தேவையான அனைத்து வழிகளையும் செய்து வருகிறோம்.
- இந்த டிரஸ்ட் மூலம் உடல் ஊனமுற்றோர் , முதியோர்களுகான உதவி தொகையை பெற்றுத்தருவது போன்ற அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்.
- இந்த டிரஸ்ட் மூலம் பெண் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பயிர் பாதுகாப்பு, உரமிடுதல், கலையெடுத்தல், விதை நெற்களை வழங்குதல் மற்றும் புதியவகை பயிர்களை விதைத்தல், மண்புழு உயிர்போன்றவற்றை எடுத்துக்கூறி விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், செய்து வருகிறோம்.
- இந்த டிரஸ்ட் மூலம் மக்கள்தொகை பெருக்கம், குடும்ப கட்டுப்பாடு, ஹ. இ. வ/எய்ட்ஸ் விழுப்புணர்வுகளை மக்களிடையே ஏற்படுத்தி வரும் அனைத்து உதவிகளையும், செய்து வருகிறோம்.
- இந்த டிரஸ்ட் மூலம் ஆன்மிக சிந்தனையை வளர்க்கும் சொற்பொழிவு, பஜனை மடம், தியானபீடம், யாத்திரிகள் தங்கியுமிடம் போன்றவற்றை அமைத்து அதன் மூலம் மக்களுக்கு ஆன்மிக சிந்தனையை வழங்கி வருகின்றோம்.
- இந்த டிரஸ்ட் மூலம் ஏழை எளியோர்களுக்கு எய்ட்ஸ் போன்ற இந்த உயிர்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து வழங்கப்படும் அசையும் மற்றும் அசைய சொத்துகளையும், நிதி உதவிகளையும் பெற்று அதன் மூலம் அவர்களுக்கு வரவேண்டிய மருத்துவ வசதி மற்றும் உணவு, உடை போன்றவற்றை வாங்கிவர ஏற்பாடு செய்து வருகின்றோம்.
- இந்த டிரஸ்ட் மூலம் கூட்டுறவு அரசு மற்றும் அரசு அல்லாத நிறுவனங்கள் , உலக நிறுவனங்கள் UNESO , U.N.I.C.E.F மற்றும் அரசு நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் மூலமாக தேவையான அனைத்து நன்கொடைகளை பெற்று ஊரக வளர்ச்சிக்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்து வருகிறோம்.
- இந்த டிரஸ்ட் மூலம் மரம் நடுதல் , விவசாய கருத்தரங்குகள் நடத்துதல் மண்வளபாதுகாப்பு , நீர்த்தடுப்பு திட்டங்கள், மழைநீர் சேகரிப்பு, மூலிகை விவசாயம் , தோட்டம் பயிர்இடுதல் , இயற்கை விவசாயம் , வணப்பயிர்கள் அபிவிருத்தி போன்ற அனைத்து காரியங்களுக்கு விவசாயத்திற்கு தேவையான அனைத்து ஆலோசனைகளையும் வழங்கிடவும், வேண்டிய ஏற்பாடுகளை செய்து வரும் மற்றும் தரிசு நிலம் மேம்பாட்டு திட்டத்தில் இணைந்து மரக்கன்றுகள் நட்டு அவற்றை பாதுகாத்து வரவேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் மற்றும் அனைத்து மனித நேயமிக்க செயல்படுகளையும் செய்து வருகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Featured Video
Address | NO.17/2, Flotno18,13th ward, Gandhinagar2ndstreet, B.Renganathapuram, Bodinayakanur, Theni, Theni Taluk, Theni District, Tamil Nadu 625582, India |
---|---|
[email protected] | |
Phone | 9962666019 |
Website |