Tamil Vesti Manufacturer
Details
Tamil vesti is promoted by Mr Ranjitha Murugan at Thanjavur.
We work hard to provide excellent customer service to all our clients.
தமிழர்களின் நல்வாக்குகள் பதிப்பிக்கப் பட்ட கைத்தறி வேட்டிகள் கிடைக்கும்.
கைத்தறி வேட்டிகள்...
நேரடியாக தமிழ்க்குடியான கைக்கோளர்க்குடி மக்களிடமிருந்து பெறப்படுகிறது பத்தாயிரம் குடும்பங்கள் நெய்த இடத்தில் தற்போது ஐநூறு அறுநூறு குடும்பங்களே கைத்தறி நெயவை செய்து கொண்டு உள்ளன. அதுவும் பகுதி நேர வேலையாகவே பாதி குடும்பங்கள் செய்கின்றன....
நிறைய குடும்பங்கள் கூலி வேலைக்கே செல்கின்றனர். முதலாளிகள் நெய்யச்சொன்னால் மட்டுமே இந்த கைத்தறி நெயவு சில மாதங்களுக்கு உயிர் பெறுகிறது...
இதற்கு காரணம் விசைத்தறிகளே...
எப்போது விசைத்தறிகள் வந்ததோ அப்போதே கைத்தறித்தொழில் நலிவடைய ஆரம்பித்து விட்டது...
ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் அனைத்து விதமான கைத்தறி தொழில்களும் சேர்த்து இருபத்தைந்து சதவிதமாக இருந்த குடும்பங்கள் தற்போது விசைத்தறி வருகையால் இரண்டு சதவிதத்தை விட மிகவும் குறைவாக அழித்தொழிக்கப்பட்டு விட்டது...
நாம் உடனடியாக வேண்டும் சீக்கிரம் வேண்டும் என்பதாலும் நவீனத்தால் இயந்திரத்தால் எளிமைப்
படுத்தப்பட்டதாலும் நம்மக்கள் விசைத்தறிக்கு மாறியதின் விளைவை நீங்கள் அறிந்தால் தமிழர்கள் எவ்வாறெல்லாம் திட்டமிட்டு அழிக்கப்பட்டதை அறிந்தால் உங்கள் இதயத்துடிப்பே நின்று விடலாம் கொஞ்சம் கவனமாக படியுங்கள்...
விசைத்தறியில் ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் பத்து தறி ஓட்ட முடியும் ஒரு தறியில் 25 மீட்டர் ஓட்டலாம் ஒரு மீட்டருக்கு மூன்று ரூபாய் கூலி ஒரு மாதத்தில் 24 நாட்கள் கணக்கு போட்டால் மாத சம்பளம் பதினெட்டாயிரம் ரூபாய் விசைத்தறியில் ஒருவரால் சம்பாதிக்க முடியும் கடின உழைப்பாளியாக இருந்தால் 25 ஆயிரம் சம்பாதிக்கலாம்.
கைத்தறியில் ஒருவர் மிக அதிகபட்சம் ஒரு நாளைக்கு ஒரு வேட்டி மட்டும் தான் நெய்ய முடியும் குறைந்தபட்சம் இரண்டு நாளைக்கு மூன்று வேட்டி நெய்யலாம் அதாவது ஒரு மாதத்தில் 10,000 முதல் 15,000 வரை மட்டுமே சம்பாதிக்க முடியும் அதுவும் நெய்ய சொல்லி சொன்னால் மட்டுமே செய்ய முடியும்...
ஆனால் நுட்பமாக கவனித்தால் கைத்தறி நெய்பவரில் பத்துக்கு இரண்டு பேர் முதலாளிகளாகவும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் அடிமைத்தனமற்ற நமது கைத்தறி பாரம்பரியத்தை காத்து வாழ்ந்துள்ளனர்....
ஆனால் விசைத்தறியில் அதிகமாக அதிகமாக சம்பாதித்தாலும் விசைத்தறி சத்தத்தாலும் அதிர்வுகளாலும் உடல் நலம் பாதிக்கப்பட்டு நோயாளிகளாக மாற்றப்பட்டு மருத்துவமணைக்கே பாதி பணத்தை செலவை செய்து விடுகின்றனர் . மேலும் சிறு முதலாளிகள் நூற்றுக்கு ஒருவர் என்பதே சந்தேகம் என்பது வேதனைக்குரியதாகவும் பெரு முதலாளிகள் பத்தாயிரத்துக்கு ஒருவர் என்ற சதவிதத்துக்கு மாற்றப்பட்டுள்ளோம் என்பதே நிதர்சனமான உண்மை...
மேலும் ஐம்பதாயிரத்துக்கும் இலட்சத்திற்கும் பாக்கி வாங்கிக் கொண்டு கொத்தடிமைகளாக இருக்கும் குடும்பங்கள் எண்ணிலடங்காது...
விசைத்தறியால் மக்கள் படும் அவலங்களை சொல்லில் அடக்க முடியாது...
கைத்தறியிருக்கும் போது முதலாளி சதவிதம் நூற்றுக்கு முப்பது பேர் என்பது தற்போது ஆயிரத்துக்கு ஒருவர் என மாறிவிட்டது எதிர்காலத்தில் நிரந்தர பொருளாதார அடிமைகளாக மாறும் ஆபத்தில் உள்ளோம்...
கைத்தறி ஆடைகளின் உழைப்பு விசைத்தறி ஆடைகளின் உழைப்பை விட இரண்டு மடங்கு அதிகம் அதிக நாள் நீடித்து உழைக்கும். பருத்தி ஆடை என்பதால் உடல் சூட்டைத்தணித்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். விலை சற்று அதிகமாக இருந்தாலும் முதலாளிகள் சதவிகிதம் அதிகரிக்கும் கைத்தறித்தொழில் காப்பாற்றப்படும்.....
யாதும் ஊரே, யாவரும் கேளிர் போன்ற தமிழர்களின் நல்வாக்குகள் பதிப்பிக்கப் பட்ட கைத்தறிவேட்டி விலை. ரூ.600 மட்டும்,
அனுப்பி வைக்க ஆகும் செலவு தனி.
3 வேட்டிகளுக்கு மேல் வாங்கினால் செலவை நாங்களே ஏற்கிறோம்.
எனது வங்கிக்கணக்கு எண்:
Kvb bank
Ranjitha murugan
Account No - 1654155000083434, Branch Name - PALLIPALAYAM, IFSC - KVBL0001654
நீலம் பச்சை சிவப்பு மூன்று நிறத்தில் உள்ளது.....
இரட்டை மடிப்பு எனும் எட்டு முழ வேட்டி 600 ரூபாய்....
இதில் கட்டிக்கோ ஒட்டிக்கோ எனும் வெல்குரோ வேட்டிகள்
650 ரூபாய்....
ஒற்றை மடிப்புகள் எனும் நான்கு முழ வேட்டிகள் 400 ரூபாய்
இதில் கட்டிக்கோ ஒட்டிக்கோ எனும் வெல்குரோ வேட்டிகள்
450 ரூபாய்....
வெல்குரோ வேட்டிகளில் உயரங்கள் நான்கு வகைகளாக உள்ளது
36 '' இன்ச்
39 '' இன்ச்
42 '' இன்ச்
45 '' இன்ச்களில் உள்ளது...
அனுப்பும் செலவு தனி
ரூபாய் 80/-
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Main Road, Thanjavur, Thanjavur Taluk, Thanjavur District, Tamil Nadu 613001, India |
---|---|
[email protected] | |
Phone | 9865928216 |
Website |