Details
Abiramam Natham Muslim Higher Secondary School Old Student Association is located at Saidapet, Chennai.
நமது சங்கம் 2014, நவம்பர் மாதம் 16ஆம் தேதி சென்னை முத்தியால்பேட்டை மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சுமார் 75 நண்பர்கள் முன்னிலையில் தொடங்கப் பட்டது.
2. படித்த பள்ளி மற்றும் மாணவ மாணவியரின் மேல் அக்கறை கொண்ட நல்ல உள்ளங்கள் சந்தா செலுத்தி அங்கத்தினர் ஆனார்கள்.
3. நமது சங்கம் யாருக்கும் போட்டியாகவோ எதிர்மறையாகவோ ஆரம்பிக்கப் பட்டது அல்ல.
4. சந்தாப் பணம் வருடத்துக்கு ரூபாய் 300/- மற்றும் முதலில் சேரும் போது ரூபாய் 100/- அட்மின் Charge (one time payment) கொடுக்க வேண்டும். வரும் நவம்பரில் (16-11-2020) ஆறு ஆண்டுகள் முடிந்து ஏழாம் ஆண்டு தொடங்கவுள்ளது.
5. சந்தாப் பணமும் நன்கொடையும் பள்ளிக்கும் பள்ளி மாணவ மாணவிகளின் நலனுக்கு மட்டுமே (சங்கச்
செலுவுகள் போக) செலவிடப்படும்.
6. ஆண்டு தோறும் முறைப்படி கணக்கு வழக்கு ஆடிட் செய்யப்பட்டு, பொதுக் குழு நடத்தி ரிஜிஸ்டர் ஆஃபீஸில் ரிட்டர்ன் தாக்கல் செய்யப் படுகிறது.
7. மேற்கூறிய கருத்துக்களில் ஆர்வம் உள்ளவர்கள் பள்ளியில் படிக்காவிட்டாலும் “நலம் விரும்பியாக” Rs. 500/- (குறைந்தது) நன்கொடையாகச் செலுத்தி சேர்ந்து கொள்ளலாம்.
8. மூன்று வருடத்திற்கு ஒரு முறை தேர்தல் முறைப்படி நடைபெறும்.
9. நலம் விரும்பியாக இருப்பவர்களுக்கு ஓட்டு உரிமை கிடையாது. பொதுக்குழுவில் கலந்து கொள்ளலாம் .
10. சமுதாய நலனில் அக்கறை கொண்ட நல்ல உள்ளங்களை "வருக வருக" என வரவேற்கின்றோம்.
அன்புடன்:
பொதுச் செயலாளர்:-
ஹாஜி கே.பி. ஷாகுல் கமீது B.Sc., M.A., B.L.,
(Saidapet, Chennai-15)
Cell numbers:9445516572.
தலைவர்:-
ஹாஜி A.K. செய்யது இப்ராஹிம்.
(Ennore, Chennai)
Cell number:- 98408 77069
ANMHSS OSA
Our association Bank Account details:-
SB ACCOUNT NUMBER:- 34672591835
Account Name:- ANMHSS OLD STUDENTS ASSOCIATION
BANK: STATE BANK OF INDIA
Saidapet branch,
Chennai-35
IFS Code:- SBIN0000912
Application form to become a member
Full name in capital letters:-
Address to communicate with cell number:-
The year which you had studied at our school:-
Subscription Rs.300/- / Rs. as donation. Payment details:- (Through bank/ cheque/cash/member or well-wisher)
Signature with date:-
(For office use:--- Approved by Executive committee or not.
Signature of Secretary:- --------------------------------------------------
Signature of President:-------------------------------------------------------)
“நாம் படித்த பள்ளி”
பச்சை வயல்களால்
சூழப்பட்ட மரகத் தீவு.
எதிர்காலக் கல்வியில்
சிந்தனை கொண்ட
கொடை வள்ளல்களால்
கட்டிக் காப்பாத்திய
தங்கப் புதையல்.
நெஞ்சில் ஈரமும்
சமுதாய அக்கறையும்
கொண்ட நல்ல
உள்ளங்களால்
பதியம் போட்டு
வளர்த்த பூஞ் சோலை.
ஆம் .அது ….
ஆற்றங்கரை மரம்.
ஆலமரநிழல்
கோடையில் மழை
மழையில் குடை
குளிர்தென்றல் காற்று .
நாம் நடை பயின்ற
நந்தவனம்.
உலாவந்த பால்வீதி .
உயிர்க் கனவுகளை
உசுப்பி விட்ட போதிமரம்.
(By K.P. Shahul Hameed Secretary ANMHS OSA)
அபிராமம் நத்தம் முஸ்லிம் மேல் நிலைப்பள்ளி பழைய மாணவர்கள் சங்கம்
சென்னை -15 (Regd)
சங்கத்தின் குறிக்கோள்
1. அபிராமம் நத்தம் முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியில் படித்த பழைய மாணவர்களை
ஒன்று சேர்த்து அவர்களின் அனுபவம், அறிவு, திறமை இவைகளைப் பகிர்ந்து
பரிமாறிக்கொள்வது.
2. பள்ளியில் படித்து விட்டு பலதுறைகளில், வெவ்வேறு ஊர்களில், வெவ்வேறு
நாடுகளில் இருந்தாலும் தனது துறைகளில் சிறந்து விளங்கும்
சாதனையாளர்களைப் பாராட்டிக் கவுரவிப்பது.
3. பத்தாம் வகுப்பு அரசாங்கத் தேர்வில் முதல் மூன்று இடங்களில் தேர்வு பெறும்
மாணவ மனவியர்களைப் பாராட்டிக் கவுரவிப்பது.(With cash award and
certificate. It has been awarded continuously since 2015. Recently it has
been decided to give cash award and certificate to VIIIth students also)
4. விளையாட்டு, கலை, மற்றும் இலக்கியத்தில் தனித் திறமை பெற்று விளங்கும்
படித்த படிக்கின்ற மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஊக்குவிப்பது.
5. வருடச் சந்தாவாக ரூபாய் முன்னூறு மட்டும் வசூலித்து அங்கத்தினராக்குவது.
(Anybody who had studied at least one year in our school can be a member)
6. நன்கொடையாகவோ அன்பளிப்பாகவோ யார் கொடுத்தாலும் ரசீது கொடுத்துப்
பெற்றுக் கொண்டு சங்கத்தின் கணக்கு உள்ள வங்கியில் வைத்து நிதி நிலையைப்
பலப்படுத்துவது.
7. பொருளாதார வசதியற்ற பள்ளியில் படித்த மாணவ மாணவிகளின் மேல்படிப்பிற்கு
அவர்கள் பெற்ற மதிபெண்களைச் சார்ந்து மேற்படிப்பிற்கு ஆலோசனை
வழங்குவது.
8. நமது பள்ளியில் படிக்காவிட்டாலும் நம்முடன் சேர்ந்து செயல்பட விரும்பும்
நண்பர்களையும் நன்கொடையாக ரூபாய் ஐநூறை ( Rs. 500/- குறைந்தது)
வசூலித்து நலம் விரும்பிகளாகச் சேர்த்துக் கொண்டு செயல் படுவது.
(நமது சங்கத்தின் செயல்பாடுகளின் போட்டோக்களை நமது
மினி வெப்சைட்டில் கண்டு களிக்கவும். மற்ற நண்பர்களுக்கும் பகிரவும்.)
---------------------------------&&&&&&-----------------------------------------
Opening Hour
Location on Map
Address | No. E3,West Hills Appaswamy Flats, 7, Reddy Kuppam Road, Saidapet, Chennai, Chennai Taluk, Chennai District, Tamil Nadu 600015, India |
---|---|
[email protected] | |
Phone | 9445516572 |
Website |
Send Email to business
Recent reviews
Hameed
Posted on: Jan 16, 2025
எனக்கு medicine urjent Ethavathu uthavi pannunga அல்லாஹ் kaaha அஸ்ஸலாமு அலைக்கும் Nan abiramam