Details
R Venkatesh Gurukkal is the lead priest of Aanaiyur temple in Sivakasi.
He is a proficient scholar in performing religious rituals like homams, yagam, yagnai, Grahapravesham and Kumbabhishegam.
You may also approach him for all type of Rudhrakshas with divine touch.
உருத்திராக்கம் என்றழைக்கப்படும் உருத்திராக்க மரங்களிலிருந்து உருத்திராக்க மணிகள் பெறப்படுகிறன.
நேபாளத்தில் அதிகம் விளைகின்றன. அதன் உயர்ந்த மலைகளும், கண்டகி, பாக்மதிகளின் குளிர் தண்ணீரும், மிதமான இதமான சூழ்நிலையும் ருத்ராட்ச மரங்கள் வளர ஏற்ற சூழ்நிலைகளாகும்.
இவைகளை, சிவபெருமானின் பக்தர்கள் கழுத்தில் அல்லது கையில் அணிவார்கள். ருத்ராக்ஷா என்ற வார்த்தையில் இருந்து ருட்ராட்சை அதன் பெயரை பெற்றது. ருத்ராக்ஷா என்பது ‘ருத்ரா’ (சிவன் என்று பொருள்) மற்றும் ‘அக்ஷா’ (கண்கள் என்று பொருள்) என்ற வார்த்தைகளில் இருந்து உருவாக்கப்பட்டதாகும். சிவபெருமானின் கண்ணீரில் இருந்து உருவானதே உருத்திராட்சை மரம் என்று நம்பப்படுகிறது. அதனால் தான் அது உருத்ராட்சை என்ற பெயரை பெற்றது. இமயமலை வட்டாரத்தில் இந்த உருத்ராட்சை மரங்கள் அதிகமாக காணப்படும். இந்த மரம் நீடித்து வாழ, குறைந்த தட்பவெப்ப நிலையும் மாசற்ற சுற்று சூழலும் இருந்தாக வேண்டும். அதனால் தான் நேபால் மற்றும் ஹிமாசல பிரதேச மலை வட்டாரங்களில் மட்டுமே இது காணப்படும். இந்த ருத்ராட்சை மரம் 100 ஆண்டு காலம் வரை நீடித்து நிற்கும். ருத்ராட்ச மணிகளை மாலையாய் கோர்த்து தொடர்ச்சியான வழிபாடுக்கு அதனை பயன்படுத்தலாம். இந்த ருத்ராட்சை மணிகள் ஒரு முகம் முதல் 21 முகங்கள் வரை கொண்டுள்ளதாகும். இருப்பினும் 1-14 முகங்கள் கொண்ட ருத்ராட்சையை மட்டுமே மனிதர்கள் அணிகிறார்கள். ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் உள்ளது. அதற்கு வியக்கத்தக்க சக்திகளும் உள்ளது. ருத்ராட்சை அணிவதால் பல வகையான நோய்கள் குணமடைந்து ஒருவரின் வாழ்க்கையில் நேர்மறையான ஆற்றலை கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.
உருத்ராட்சம் அணிவது பற்றி . . . . .
இந்துக்களில் சைவம், வைணவம் என்று கூறுவது போல், கிரகங் களிலும் சைவம், வைணவம் என் றெல்லாம் உண்டு.
சூரியன், சனி, செவ்வாய், குரு ஆகிய வை சிவ கோத்திரம். சனியை இரண் டு பக்கத்திலும் வைக்கலாம்.
செவ்வாய், குரு, சூரியன் ஆகிய மூன் றும் சைவக் கிரகங்கள், சைவக் கட வுள்கள் ஆகும். செவ்வாய் – முருக ன், குரு – தட்சிணாமூர்த்தி, சூரியன் சிவனுக்குரியவர்கள்.
இந்த ஆதிக்கம் உடையவர்கள் எல்லாம் ருத்ராட்சம் அணிந்தால் பிரம்மாண்டமாக முன்னுக்கு வருவார்கள்.
அதிலேயும் ருத்ராட்சத்திலும் ஒன்று முதல் பல முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் உள் ளன. ஆனால் எல்லா முக ருத்ராட்சங்களும் பலன் அளிக்கக்கூடிய ருத்ராட்சங்களே. அதில் எந்த மாறுபாடும் இல்லை.
ஒவ்வொரு முகத்திற்கும் ஏற்றபடி அதில் மரு த்துவ குணங்களும், ஆன்மீக குணங்களும் உள்ளன. பல்வேறு நூல்கள் இதைப் பற்றிக் கூறுகின்றன.
ருத்ராட்சத்தை எப்படி வேண்டுமானாலும் அணியலாம். ஆனால் ருத்ராட்சத்தை தனியாக அணியாமல் ஏதாவது ஒரு உலோகத்துடன் சேர்த்து அணிந்தால் அது இல்லற வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நல்லது.
அதற்காகத்தான் ருத்ராட்சத்தின் இரு பக்கத்திலும் பூன் போன்று செய்து அதனை நூலில் கட்டித் தொங்க விடுகிறார்கள்.
ஏழரை சனி, அஷ்டமத்து சனி எல்லா ம் வந்தாலே பலர் தானே ருத்ராட்சத் தை விரும்பி அணிவதைப் பார்த்திரு க்கிறேன். ஏழரை சனி, அஷ்டமத்து சனி வந்தால் பழமையானவற்றை விரும்புவார்கள். ருத்ராட்சம், யானை தந்தம், யானை முடி மோதிரம் போன்றவற்றை அணிவார் கள்.
மற்றவர்களிடம் இருந்து தன்னை வித்தியாசப்படு த்திக் காட்டுவதற் காக அல்லது அந்தப் பொருளின் மீதுள்ள ஒரு நம்பிக்கையினால் அவ்வாறு செய்வா ர்கள்.
சனி தசை நடக்கும்போது தன்னம்பிக்கையை விட மற்ற பொருட்க ளின் மீதுதான் நம்பிக்கை அதிகமாக இருக்கும். அதை அணிந்து கொண்டால் அதனால் நமக்கு நன்மை அளிக்கும் என்றெல்லாம் நினைப்பார்கள்.
சனி ராசி உள்ளவர்களும் ருத்ரா ட்சத்தை விரும்பி அணிவார்கள். மகரம், கும்ப ராசிக்காரர்கள் ருத்ராட்சத்தை விரும்புவார்கள்.
ருத்ராட்சத்தை அணியலாம். அத னால் நல்ல பலன்கள்தான் கிட் டும்.
புதனுடைய அம்சமாக, அதாவது சிவனுடைய அம்சமாக கருதப்படு வது ருத்ராட்சம். சிவனின் அங்கத்திலிருந்து விழக்கூடிய வேர்வை என்றெல்லாம் சில புராணங்கள் சொல்கின் றன.
உருத்ராட்சத்திற்கு இயல்பாகவே மருத்துவ குணங்கள் நிறைய உண் டு. ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். சிலரெ ல்லாம் போகம் செய்யும்போது இருக்கக்கூ டாது என்றெல்லாம் சொல்வார்கள். அப்படி யெல்லாம் ஒன்றும் கியைடயாது, போகிக் கும்போ து கூட இருக்கலாம். தீட்டு என்பது கிடையாது.
ஆனால், ருத்ராட்சத்தை தங்கம் அல்லது வெள்ளியில் கட்டி அணி யும் போது, மந்த்ரா உபதேசம் பெற்று, குரு நாதர் கையில் இருந்து வாங்கி அணியும் போதெல்லாம் மிகவும் நேமமிஷ்டையுடன் இருக்க வேண்டும். அதாவது தீட்சையாக தரும் ருத்ராட்சத்தை பெற்றுக் கொண்டு தவறான செயல்கள், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக் கூடாது.
ஆண், பெண் என இருபாலருமே ருத்ராட்சத்தை அணியலாம். பெண் களுக்கு இருக்கக்கூடிய இயல்பான இடர்பாடான நாட்களில் கூட அணிந்திருக்கலாம். அது ஒன்று ம் குரோதம் கிடையாது. வட இந் திய ப் பெண்கள் சிலர் தலையில் போடும் கிளிப்புகளில் கூட ருத் ராட்சத்தை வைத்துக் கொண்டி ருக்கிறார்கள்.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத் தக்கூடிய சக்தியும், மன அழுத்த த்தை குறைக்கும் சக்தியும் ருத் ராட்சத்திற்கு உண்டு. பக்கவாத த்திற்கு முந்தைய காலகட்டத்தில் ருத்ராட்ச மாலையை உடம்பு முழுவதும் தேய்த்துவிடும் போது அது சரியாகிறது.
இன்றைக்கும் தரமான, பழமைவா ய்ந்த சித்த வைத்தியர்கள் கால் முட க்கம், கை முடக்கம் இதற்கெல்லா ம் மருந்தும் கொடுத்து, ருத்ராட்ச மாலையால் கை, கால்களை உரு வி மருத்துவம் அளிக்கும் வழக்கமெ ல்லாம் இன்றைக்கும் இருக்கிறது.
சீரான இரத்த ஓட்டங்கள், கால் மறத்துப் போகாமல் இருப்பதற்கு போன்றவற்றிற்கும் ருத்ராட்சம் பயன்படும். ருத்ராட்சத்தின் சிறு துளி யை இழைத்து உள்ளுக்கு சாப்பிடும் போது நோய் எதிர்ப்புச் சக்தியெ ல்லாம் அதிகரிக்கிறது. உடலிற்கு ஒரு மினுமினுப்பைக் கொடுக்கு ம். இதுபோன்ற மருத்துவக் குணங்கள் ருத்ராட்சத்திற்கு உண்டு. அதனால் யார் வேண்டுமானாலும் அணியலாம்.
உருத்திராட்சம் அணிவதால் சுய ஆற்றலையும், சுய அன்பையும் மேம்படுத்த உதவும். அணிவோரின் உள் ஒளியை இது மேலோங்கச் செய்கிறது. இது பெரியம்மை, காக்காய் வலிப்பு, கக்குவான் போன்ற பல்வேறு அபாயகரமான நோய்களைக் குணப்படுத்த வல்லது. குறிப்பிட்ட முறையில், மருத்துவ விதி முறைகளைக்கேற்பக் கையாளப்பட்டால் இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த புண்களையும் கூடக் குணப்படுத்தும்.
உருத்திராட்ச மணி மாலைகள் சித்தர் பெருமக்களின் அடையாளங்களில் ஒன்றாகவே இருந்திருக்கிறது. இன்றும் கூட நாம் உருவகப் படுத்தும் சித்தர் உருவங்களில் இந்த உருத்திராட்ச மாலைகள் இடம் பெறுவதை கவனித்திருப்பீர்கள். உருத்திராட்ச மணிகளைப் பற்றிய குறிப்புகள் பல்வேறு சித்தர்களின் பாடல்களில் நமக்கு காணக் கிடைக்கிறது.
உயர்ந்த மன அழுத்தம் கூர்ந்த மனக்குவிவு ஆகியவை ஒருவருக்கு ஏற்படும் போது, மூளைக்கும் மூளையிலிருந்து இரத்த ஓட்டம் பீறிட்டும் செல்வது நோக்கத் தக்கது. இந்த மணிகளின் துணையுடன் ஒருவகைச் சாந்தம் ஒரு முகக்குவிவு, கூர்ந்த குவிவு ஆகியவற்றை எளிதில் பெறமுடிகிறது. அத்துடன் உருத்திராக்கம் அணிவோருக்கு குறிப்பிடத்தக்க அளவு மனத்திடத்தையும், உள்ளார்ந்த பலத்தையும் அளிப்பதாகக் கண்டு கொள்ளப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாட்டிற்கான உருத்திராக்க மணிகளைவிட, ஒன்றிலிருந்து இருபத்தொரு முகங்கள் வரை உள்ள அதிக ஆற்றலுள்ள உருத்திராக்க மணிகளுமுண்டு.
இவை ஒவ்வொன்றும் நமது மனதையும், நம்மைச் சுற்றியுள்ள ஆக்கபூர்வமான சக்திகளையும் ஒரு நிலைப்படுத்தி, செழிப்பு, ஆக்கம், உள்ளுணர்வுத் திறன், எதிர்கால நிகழ்வுகள் குறித்து ஆய்தல், பாலின ஒத்திசைவு போன்ற சிறப்புப் பண்புகளை அளிக்கின்றன. உறுதியாக, உருத்திராக்கங்கள் நாம் இன்னும் திறம்படச் செயலாற்றவும், இன்னும் வெற்றி காணும் வாழ்க்கையை வாழவும் உதவுகின்ற வியத்தகு மணிகளாகும்.
உருத்திராக்க மணிகள் அணிபவர்களுக்கு மன அழுத்தம் குறைந்துள்ளதையும் அவர்கள் கண்டனர். இவ்வாறு மன அழுத்த நிலை குறைவது, தொடர்ச்சியாகச் சாந்தப்படுத்தும் மருந்துகளை அதிக அளவில் உட்கொள்வதால் மட்டுமே செய்ய முடிந்துள்ளது. உருத்திராக்க மணிகள் ஆக்கப்பூர்வமான அதிர்வலைகளை வெளிக்கொணர்ந்து ஒருவருக்கு உடலிலும் மனதிலுமுள்ள எதிர்மறை உணர்வுகளை வெளியேற்றுகின்றன.
Ref https://tinyurl.com/y67pfvsx
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
Location on Map
Address | KSA Rajadurai Nagar, Brindhavanam 19th Street, Aanaiyur, Sivakasi, Sivakasi Taluk, Virudhunagar District, Tamil Nadu 626123, India |
---|---|
[email protected] | |
Phone | 8072468009 |
Website |